முதல்வர் எடப்பாடி பற்றி அவதூறு வீடியோ!- டிஸ்மிஸ் போலீஸ்காரர் கைது

0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறு வீடியோ வெளியிட்ட முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறு கருத்துகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது என்றும், இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் செந்தில்குமார் (வயது 41) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் ஆவார். தி.மு.க.வை சேர்ந்தவர். அ.தி.மு.க. சார்பில் சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்ததாகவும் இவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here