முசிறி பெண் டிஎஸ்பிக்கு முதல்வர் வாழ்த்து..!

0

முதல்வரின் முகவரி துறைக்கு வந்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து 97% மனுக்களுக்கு தீர்வு கண்டதால் முசிறி பெண் டிஎஸ்பி யாஸ்மினை முதல்வர் மு க ஸ்டாலின் தொலைபேசி மூலம் பாராட்டினார். முதல்வரின் தனிப்பிரிவுக்கு வரும் அணுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ‘முதல் வரின் முகவரி’ என்ற புதிய துறையை முதல்வர் மு க ஸ்டாலின் உருவாக்கினார். மேலும் முதல் வரின் முகவரிக்கு’ வரக்கூடிய புகார்கள் அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கடி ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இந்த சூழலில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் அளிக்கப்பட்ட புகார்கள் மீது 97 சதவீத தீர்வு கண்டு சிறப்பாக செயல்பட்டதற்காக முசிறி டிஎஸ்பி யாஸ்மினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் எந்த மாதிரியான புகார்கள் அதிகம் வருகின்றன இன்னும் எத்தனை மனுக்கள் நிலவில் உள்ளன என்ற விவரங்களை கேட்ட முதல்வர் இனிவரும் நாட்களிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் பொது மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். 95% புகார்களுக்கு தீர்வு இது குறித்து காவல் அதிகாரிகளிடம் கேட்டபோது திருச்சி மாவட்ட காவல் துறை பொறுத்தளவில் ‘முதல்வரின் முகவரி’ துறையின் கீழ் இதுவரை கிடைக்கப்பெற்ற 3910 மனுக்களில் 3725 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது 95% சதவீதமாகும். இதில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி மாநில அளவில் முசிறி உட்கோட்டம் சிறப்பிடம் பெற்றுள்ளது. எனவே முதல்வர் மு க ஸ்டாலின் முசிறி டிஎஸ்பிஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார் இதற்கு காரணமான முசிறி உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் போலீசாரையும் ஐ.ஜி, டி.ஐ.ஜி, எஸ்.பி பாராட்டியுள்ளனர். முதல்வரிடம் பாராட்டு பெற்ற முசிறி டி.எஸ்.பி யாஸ்மின், தமிழக காவல்துறையில் பணிக்குச் சேர்ந்த கடந்த ஜூலை மாதம் தான் முதல் பணியிடமாக முசிறியில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது…..

செய்தியாளர் : ரூபன்ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here