முக்கிய நபர்கள் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விறுவிறுப்பு

0

தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தினமும் விசாரித்து விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ஹெரன்பால், அருளானந்தம், பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்தது சிபிஐ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here