மியான்மரில் ராணுவ புரட்சிக்கு எதிராக வெடித்தது போராட்டம்!

0

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. இதனை கண்டித்து நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

-Advertisements-

ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது‌.‌ இதுதொடர்பாக மியான்மர் ராணுவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள், ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட ராணுவத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 30 நகரங்களில் சுமார் 70 மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ துறையினர் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மியான்மர் சட்ட ஒத்துழையாமை இயக்கம் என்ற குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here