மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்… கிடப்பில் போடப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி…

0

ஓசூர் மாநகராட்சி 16 வது வார்டு அரசனட்டி பகுதியில் கழிவு நீர் கால்வாய் சீரமைக்கும் பணி ஆரம்பித்து 2 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது கால்வாய் சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது, வியாபாரிகள், பொதுமக்கள் தொடர்ச்சியாக மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் மக்கள் பிரதிநிதியிடம் முறையிட்டும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்கின்ற ஆதங்கத்தை பொதுமக்கள், வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பெரியவர்கள், குழந்தைகள் கழிவு நீர் கால்வாயில் தவறி விழும் அபாயம் இருப்பதாகவும் தங்களின் அச்சத்தை தெரிவித்தனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பாக நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here