புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வில், மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் அண்ணன் கே.கே.செல்லபாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், துணைத்தலைவர் லியாகத் அலி மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.