மயிலாடுதுறை:: அதிமுக எம்எல்ஏ., காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ தூண்டுதலின்பேரில்.. “திமுக ஒன்றிய செயலாளர்கள், யூனியன் சேர்மன், துணை சேர்மன் மீது புகார்?

0

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 27 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் உட்பட திமுக கூட்டணிச் சேர்ந்த 20 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஒரு பா.ம.க. உறுப்பினர் உட்பட அ.தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த 7 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். தற்பொழுது மயிலாடுதுறை ஒன்றியக் குழுத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த காமாட்சி மூர்த்தி உள்ளார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த மகேஸ்வரி முருகவேல் ஒன்றியக்குழு துணைத் தலைவராக உள்ளார். கடந்த சில தினங்களாக தி.மு.க. நிர்வாகிகள் சிலர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மகேஸ்வரி முருகவேலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன், மும்தாஜ், காமராஜ், கபிலர், சிவக்குமார் ஆகிய 5 ஒன்றிய குழு உறுப்பினர்கள் நேற்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அந்த 5 உறுப்பினர்களும் திமுக ஒன்றிய செயலாளருக்கு எதிராகப் பேட்டியளித்தனர். அப்போது தி.மு.க. ஒன்றிய அவைத் தலைவரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ராஜேந்திரன் கூறுகையில், மயிலாடுதுறை ஒன்றியத்தில் 2019-ல் நடந்த ஒன்றிய குழு தலைவருக்கான உள்ளாட்சித் தேர்தலில் அன்றைக்கு தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த மூவலூர் மூர்த்தி மனைவி காமாட்சியும், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் மனைவி ஸ்ரீமதியும் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டனர். தி.மு.க.வில் இரண்டு அணிகளாகப் போட்டியிட்ட போதும், அதிமுகவினரும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, இந்த 2 தி.மு.க.

-Advertisements-
மு.க. ஸ்டாலின்

வேட்பாளர்களுக்குத்தான் வாக்களித்தனர். அப்போது ஒன்றியக்குழு தலைவராகக் காமாட்சி மூர்த்தி வெற்றிபெற்றார். அதன் பிறகு நடந்த ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த மகேஸ்வரி முருகவேல் வெற்றிபெற்றார். திமுகவினர் இடையே ஏற்பட்ட பிளவின் காரணமாகவே திமுகவினர் இரண்டு அணிகளாகப் போட்டியிடும் நிலையும், அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக்குழு துணைத் தலைவராக மகேஸ்வரி முருகவேல் தேர்ந்தெடுக்கப்படும் சூழலும் ஏற்பட்டது. தற்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக திமுகவைச் சேர்ந்த

கவுன்சிலர்கள் புகார்

ஒன்றிய பொறுப்பாளர் இமயநாதன் மற்றும் சிலர் சேர்ந்து கொண்டு அதிமுகவைச் சேர்ந்த மகேஸ்வரி முருகவேலை ஒன்றிய குழு தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும், அதற்கு தாங்கள் கொண்டு வந்த பேப்பரில் கையெழுத்திடுங்கள் என தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்களிடம் கேட்டு வருகின்றனர். விரைவில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சியில் பதவி பறிப்பு என்பது சாத்தியமில்லாதது. அப்படிப்பட்ட நிலையில் அ.தி.மு.க.வினரின் தூண்டுதலின் பேரில் திமுகவில் சிலர் உட்கட்சி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதனால் உட்கட்சி பூசல் அதிகமாகி தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடையும் சூழல் ஏற்படலாம். எனவே குழப்பத்தை ஏற்படுத்தும் தி.மு.க. நிர்வாகிகள் மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார்

எடுக்க வேண்டும் என்றார் அவர். இதனைத் தொடர்ந்து தி.மு.க. தெற்கு ஒன்றிய மகளிரணி அமைப்பாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான மும்தாஜ் பேசுகையில், எனது வீட்டிற்கு வந்த திமுக ஒன்றிய செயலாளர்கள் இளையபெருமாள், இமயநாதன் மற்றும் சில நிர்வாகிகள் என்னுடைய மகளிரணி பொறுப்பைப் பறித்து விடுவோம். எனவே, தாங்கள் கொண்டு வந்திருக்கும் பேப்பரில் கையெழுத்திடுமாறு மிரட்டினர். தேர்தல் காலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் இவர்கள் மீது கட்சித் தலைவர் ஸ்டாலின் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இளையபெருமாள்

மேலும் பெயர் வெளியிட விரும்பாத திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசுகையில், மயிலாடுதுறை தொகுதியில் மூவலூர் மூர்த்தி மக்கள் செல்வாக்கு மிக்கவர். அவர் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் அதிமுகவைப் படுதோல்வி அடையச் செய்வார். இதனைப் பிடிக்காத அவரது அரசியல் எதிரிகள் ஏற்கனவே பொய்யான குற்றச்சாட்டுக் கூறி ஒன்றிய செயலாளர் பதவியிலிருந்து மூவலூர் மூர்த்தியை நீக்க வைத்துவிட்டனர். தற்போது திமுக தலைமையின் ரகசிய விசாரணையில் மூவலூர் மூர்த்தி போட்டியிட்டால் நிச்சயம் வெற்றிபெறுவார்

மூவலூர் மூர்த்தி

என்று தகவல் எட்டியது. இதை அறிந்து அறிந்துகொண்ட காங்கிரஸ் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜ்குமார் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸுக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மூர்த்தியின் எதிரிகளைத் தூண்டி விட்டுள்ளார். ஆனாலும் இதனை எதிர்கொண்டு மூர்த்தி சாதித்துக் காட்டுவார் என்றார் அவர்.

மேலும் அதிமுக பிரமுகர் ஒருவர் கூறுகையில், மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட ஒன்றியக்குழு

மகேஸ்வரி முருகவேல்

துணைத்தலைவர் மகேஸ்வரி முருகவேல் தனது சோர்ஸ் மூலம் காய் நகர்த்தி வருகிறார். மகேஸ்வரி முருகவேலும், தற்போதைய எம்எல்ஏ ராதாகிருஷ்ணனும் ஆனதாண்டவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தனது ஊரிலிருந்து ஒருவர் அதிமுக வேட்பாளர் ஆவதை விரும்பாத எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தனது நெருங்கிய நண்பரான திமுக ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் மூலம் மகேஸ்வரி முருகவேலுக்கு எதிராகக் காய் நகர்த்தி வருகிறார் என்றார் அவர்.

இப்படி அதிமுகவும், திமுகவும் தங்கள் கட்சியினர் மீதே சரமாரி குற்றச்சாட்டுகளைக் கூறி வருவது மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-Advertisements-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here