மனைவியின் முதல் கணவரின் மகளை “பாலியல் பலாத்காரம்” செய்த தஞ்சை கட்டிட பொறியாளர் போக்சோவில் கைது..!!

0

தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் ரம்யா. இவருக்குத் திருமணமாகி முதல் கணவர் மூலம் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் .ரம்யாவிற்கு முதல் கணவரோடு கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

விவாகரத்து ஆன நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எம். கல்லுப்பட்டி சேர்ந்த வில்லிங்டன் கிறிஸ்டோபர் என்கிற கட்டிடப்

பொறியாளரை இரண்டாவதாகத் திருமணம் செய்தார். இந்நிலையில் வெளி ஊருக்குச் சென்றிருந்த பொறியாளர் கிறிஸ்டோபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சை மாரியம்மன் கோவில் உள்ள மனைவி வீட்டில் வந்து தங்கினார் .நேற்று முன்தினம் அவருடைய மனைவியும் மகனும் வெளியில் சென்றிருந்த போது மனைவியின் முதல் கணவர் ஒன்பது வயது மகளை கிறிஸ்டோபர் பாலியல் பலாத்காரம் செய்ய

முயற்சித்து கொடுமைப்படுத்தி உள்ளார். அதனை வெளியே சொன்னால் குடும்பத்தையே கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து நடந்த சம்பவங்களைச் சிறுமி தாயிடம் கூறி அழுதுள்ளார் இதையடுத்து தாய், சிறுமி, மகன், உள்ளிட்ட அனைவரும் வல்லம் மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பெயரில் பொறியாளர் கிறிஸ்டோபரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் கலைவாணி சிறையில் அடைத்து உள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here