மதுரை மாவட்டம்69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது..!

0

பயனாளிகளுக்கு ரூ.56,49,199/- மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கி சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு
கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

மதுரை மடீட்சியா கூட்டரங்கில் இன்று (17.11.2022) கூட்டுறவுத்துறையின் சார்பாக நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பாக பயனாளிகளுக்கு ரூ.56,49,199/- மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கி சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

இவ்விழாவில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பேசியதாவது:-

கூட்டுறவுத் துறை என்பது பொருளாதாரத்தில் பின் தங்கிய சாமான்ய மக்களின் வளர்ச்சிக்காக, இலாப நோக்கமில்லாமல் செயல்படும் முக்கிய துறையாக விளங்குகின்றது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பொதுமக்களுக்கு பல்வேறு கடனுதவி வழங்கல் மற்றும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் முழுமையான கணினி மயமாக்கல் இல்லாமல் வங்கிகளை இயக்குவது சவாலான காரியமாகும். அந்தவகையில் கூட்டுறவுத் துறையில் கணினி பயன்பாட்டை அதிகரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது அவசியமாகின்றது. கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் நியாயவிலை கடைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதில் புகார் ஏதும் எழாத வகையில் முறையே செயலாற்றிட வேண்டும் என மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.சிம்ரன்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ர.சக்திவேல் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஆ.வெங்கடேசன் (மதுரை வடக்கு), திரு.எம்.பூமிநாதன் (மதுரை தெற்கு) அவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.சூரியகலா அவர்கள், மதுரை மாநகராட்சி துணை மேயர் திரு.நாகராஜன் அவர்கள், இணைப்பதிவாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மரு.ஜீவா அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இவ்விழா முடிவில் கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பேச்சுப்போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

செய்தி : பிரவீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here