கும்பகோணத்தில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற SSI மீது தாக்கு.. முறிந்தது கை.. குற்றவாளிகள் வழுக்கி விழ வாய்ப்பிருக்கிறது…

0

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கும்பகோணம் வண்டிப்பேட்டை பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தல் நடக்கிறது அதனை தடுக்க வேண்டுமென கும்பகோணம் பகுதி மக்கள் கோரிக்கை வைக்க, அதனை பிடிக்கச் சென்ற எஸ்.பி தனிப்படை பிரிவைச் சார்ந்த SSI. செல்வகுமார் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த விக்கி, செல்வம் ,சீனிவாசன், கௌதம், ரஜினி, வாஞ்சி, உள்ளிட்ட சமூக விரோதிகளை பிடிக்க எஸ் பி தஞ்சை ஸ்பெஷல் டீம் உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையில் ஒரு சிறப்புப் டீமை அனுப்பியுள்ளார் ,அந்த டீம் அந்த சமூக விரோதிகளை தேடி வருகின்றனர் இவர்கள் அனைவரும் கும்பகோணம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தினந்தோறும் மாட்டு வண்டியில் மணல் கடத்தி ஓரு இடத்தில் சேமித்து வைத்து அதனை லாரியில் விற்று வருகிறார்களாம் இந்த தகவலை அப்பகுதி பொதுமக்கள் காவல் துறைக்கு தெரிவிக்க , காவல்துறை இவர்களை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று S.I.கீர்த்தி வாசன் தலைமையில் செல்லும் போது இச்சம்பவம் நடந்துள்ளது . மேலும் இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் பாதிக்கும் மேற்பட்ட. குற்றவாளிகளை ஸ்பெஷல் டீம் கண்ணன் தூக்கி விட்டதாகவும் இன்னும் சிலர் மட்டும் மீதம் இருப்பதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. காவல்துறையை தாக்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த கும்பகோணம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது..

ஸ்கேன் ரிப்போட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here