பெண்ணின் கிராமத்துக்கு சீல்… எஸ்பி, டிஎஸ்பி சஸ்பெண்ட்… உ.பி-யில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்!

0

ஹத்ராஸ் பாதிக்கபட்ட பெண்ணின் கிராமத்திற்கு சீல் வைத்துள்ள காவல்துறையினர், உறவினர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்ததோடு, பத்திரிகையாளர்களை சந்திக்கவும் தடைவிதித்துள்ளனர். இதனிடையே, மாவட்ட எஸ்பி, டிஎஸ்டி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலை நள்ளிரவில் காவல்துறையினர் எரித்தது சர்ச்சையாக வெடித்தது. அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை சந்திக்க சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரும் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஹத்ராஸ் மாவட்ட எஸ்பி விக்ராந்த் வீர் மற்றும் டிஎஸ்பி, நான்கு உள்ளூர் போலீஸ் அதிகாரிகளை இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார் முதல்வர் யோகி. மேலும், எஸ்பி மற்றும் டிஎஸ்பியிடம் நர்கோ பாலிகிராஃப் சோதனைகளும் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமத்துக்கு சீல் வைத்துள்ள காவல்துறையினர், ஊடகவியலாளர்கள் கிராமத்திற்குள் நுழைவதையும் குடும்பத்தினரை சந்திப்பதையும் தடை விதித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவரின் உறவினர்களின் தொலைபேசிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2012 டிசம்பரில் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயாவின் வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா இந்த வழக்கை ஏற்றுக்கொண்டார். சீமா குஷ்வாஹா கூறுகையில், “கும்பலால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் குடும்பத்தினர் என்னை ஹத்ராஸுக்கு அழைத்துள்ளனர். ஏனெனில் நான் அவர்களின் சட்ட ஆலோசகராக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here