பூண்டி புஷ்பம் கல்லூரியில் ஆசிரியர் நியமனத்தில் ஊழல்… பூண்டி துளசிய்யா வாண்டையார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு… தஞ்சை விஜிலென்ஸ் அதிரடி..

0

தஞ்சை பூண்டி புஷ்பம் காலேஜ் என்றால் அனைவருக்கும் புதிதாக சொல்லி தெரிய வேண்டியது இல்லை சுற்றி முற்றி படித்த அனைவருக்கும் அது ஒரு கோயில் போல தான் இன்றும் திகழும். அங்கு படித்தவர்கள் இன்று உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பேர் பல்வேறு உயர்ந்த பதவிகளில் இருந்து அந்த பதவியை அலங்கரித்து வருகின்றனர். இந் நிலையில் கடந்த ஆண்டு அனைவராலும் கல்வி கடவுள் என்று அழைக்கப்படும் பூண்டி துளசியய்யா வாண்டையார் இறந்ததற்கு பிறகு அந்த கல்லூரியை அவருடைய மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் 27/7/2022 அன்று தஞ்சை லஞ்சம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர்கள் மீதும் அதன் நிறுவனர் மற்றும் பள்ளி தாளாராக இருந்த பூண்டி துளசியய்யா வாண்டையார் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது .

பூண்டி புஷ்பம் கல்லூரி

இந்த தகவல் நமக்கு கிடைக்க பெரும் அதிர்ச்சியுடன் ஏன் இந்த முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது, எப்படி இதில் துளசிய்யா வாண்டையார் சிக்க வைக்கப்பட்டார் என்பதை பற்றி விசாரிக்கும் வகையில் அந்த முதல் தகவல் அறிக்கையில் என்ன குற்றச்சாட்டு இவர்கள் மீது தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்…

கல்லூரி முதல்வர் சிவகுமார்

FIR – கொடுத்த தகவல்..

அ.வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி பூண்டி கடந்த 1956 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு தற்போதுவரை இயங்கி வரும் அரசு உதவிபெறும் கல்லூரியாகும். எதிரி -1 திரு. T. அறிவுடை நம்பி. த/பெ திருநாவுக்கரசு, என்பவர் தஞ்சாவூர் மாவட்ட கல்லூரி கல்வி மண்டல துணை இயக்குநராக 30.06.2018 முதல் 26.02.2020 வரை பணிபுரிந்துள்ளார். எதிரி -2 திரு.துரைராஜன் என்பவர் கண்காணிப்பாளராக, அ.வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, பூண்டியில் 02.11.1992 முதல் தற்போதுவரை பணிபுரிந்து வருகிறார்.
எதிரி -3 முனைவர்


S.உதயகுமார் என்பவர் அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, பூண்டியில் முதல்வராக ஜூன் 2015 முதல் மே 2017 வரை பணிபுரிந்துள்ளார். எதிரி -4 திரு. S.K. தியாகராஜன் என்பவர் அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி பூண்டியில் வேதியியல் துறை உதவி பேராசிரியராக 16.06.2017 முதல் தற்போது வரை பணிபுரிந்து வருகிறார். எதிரி -5 திருமதி c. கற்பகசுந்தரி என்பவர் அ வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி பூண்டியில் தாவரவியல் துறையில் உதவி பேராசிரியராக 16.06.2017 முதல் தற்போது வரை பணிபுரிந்து வருகிறார். எதிரி-6 திரு. K. துளசிய்யா வாண்டையார் என்பவர் அ.வீரய்யா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி பூண்டியின் / தாளாளர் செயலாளராக இருந்து இறந்து விட்டார். மற்றும் எதிரி -7 திரு. K.R. குமரேஷ், அ வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி பூண்டியில் கணக்காளராக சுயநிதி பிரிவில் 2002 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். மேற்கண்ட எதிரிகள்
1 முதல் 5 வரையிலானவர்கள் prevention of corruption act, 1998 பிரிவு 2 (c)-ன் படி பொது ஊழியர்கள் ஆவார்கள். எதிரிகள் -6 மற்றும் 7 தனி நபர்களாவார்கள்.

கல்விக் கல்லூரி இணை இயக்குனர்

குற்றச்சாட்டு -1

அ வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி பூண்டியில் கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற 19 உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தின் போது இன சுழற்சி முறையை பின்பற்றாமல் சில உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் எதிரி -4 திரு. S.k. தியாகராஜன் வேதியியல் துறை உதவி பேராசிரியர் மற்றும் தாவரவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் எதிரி -5 திரு. சி.கற்பகசுந்தரி ஆகிய இருவரும் தாங்கள் அரசு பணியில் சேர்வதற்காக தாங்கள் பிற்படுத்தபட்ட வகுப்பினர் (backward class) என்பதை மறைத்து மிகவும் பிற்படுத்த வகுப்பினர் (Most backward class) என்பதற்கு இணையான சீர்மரபினர் (Denotified community) என்ற போலியான ஜாதி சான்றிதழ்களை உருவாக்கி

அதை உண்மை என்று சமர்ப்பித்து, அரசை ஏமாற்றி அ வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி பூண்டியில் உதவி பேராசிரியர்களாக பணி நியமனம் பெற்று, கடந்த 16.06.2017 முதல் தற்போது வரை உதவி பேராசிரியர்களாக பணிபுரிந்த அரசிடம் இருந்து ஊதியம் பெற்று வருகிறார்கள். அதில் கடந்த 16.06.2017 முதல் 30.10.2020 வரை பெற்றுள்ள அரசு ஊதியம் தலா ரூ.27,49,644/ பெற்று ஆக மொத்தம் ரூ.54,99,288/-ஐ ஊதியமாக பெற்று மேற்படி கல்லூரியில் உதவி பேராசிரியர்களாக பணிபுரிந்தும் தற்போதும் தொடர்ந்து உதவி பேராசிரியர்களாக பணிபுரிந்து அரசு ஊதியம் பெற்று வருகிறார்கள். எனவே இன சுழற்சி முறையில் பணி நியமனத்திற்கு தேர்வானவர்களின் ஜாதிச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை பெறாமல்/ சரிப்பார்க்காமல் உதவி பேராசிரியர்களாக பணி நியமனத்திற்கு ஒப்புதல் செய்த எதிரி-1 திரு.டி.அறிவுடை நம்பி, போலி ஜாதி சான்றிதழ்களை சமர்ப்பித்து பணி நியமனம் பெற்ற எதிரி-4 திரு. S.k. தியாகராஜன் மற்றும் எதிரி-5 திருமதி சி.கற்பக சுந்தரி மற்றும் மேற்படி இருவரையும் பணி நியமனம் செய்த எதிரி-6 திரு. K. துளசிய்யா வாண்டையார் ஆகியோர்கள் குற்றமுறு சதி, ஏமாற்றும் நோக்கத்துடன் பொய்யாவனம் புனைதல், பொய்யாக புனையப்பட்ட ஆவணத்தை உண்மையானதென பயன்படுத்தியது குற்றமுறு நம்பிக்கை மோசடி ஆகிய குற்றங்களை இ.த.ச பிரிவு 465, 120 (B), 468, 471, 420, 409 IPC r/w 109 IPC & 13 (2) r/w 13(1) (c) of prevention of corruption Act 1988-படி புரிந்துள்ளனர்.

குற்றச்சாட்டு-2

FIR.copy

கடந்த நவம்பர் 2015 முதல் நவம்பர் 2017ம் ஆண்டில், தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் உள்ள அ வீரய்யா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் (தன்னாட்சி) faculty development programme திட்டத்தில் 4 உதவி பேராசிரியர்கள் ஆராய்ச்சி படிப்பிற்காக சென்றபோது, அவர்களுக்கு பதிலாக faculty improvement programme திட்டத்தின் கீழ் 4 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த 03.11.2015ம் தேதி முதல் 02.11.2017 வரை 24 மாதங்கள் பணிபுரிய நியமிக்கப்பட்டனர்.அதில் இயற்பியல் துறைக்காக நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர் திரு.L.ஸ்ரீ ராம் என்பவர் கடந்த 3.11.2015ம் தேதி முதல் 13.01.2016ம் தேதி வரை மேற்படி கல்லூரியில் பணிபுரிந்தவர். 14.01.2016ம் தேதிக்கு பிறகு கல்லூரிக்கு பணிக்கு வரவில்லை. மேற்படி L.ஸ்ரீராம் கல்லூரிக்கு பணிபுரிய வராத நாட்களில், கல்லூரிக்கு வந்து பணிபுரிந்தது போன்று இயற்பியல் துறை வருகைப்பதிவேட்டில் கடந்த 18.01.2016ம் தேதிக்கு பிறகு உள்ள வேலை நாட்களில் அவரது பெயருக்கு நேராக அவரது சுருக்கொப்பத்தை வேறு நபர் மூலம் செய்தும், மேற்படி உதவி பேராசிரியர் ஸ்ரீராம் பணிக்கு வராததை, எதிரி -2 திரு.துரைராஜன் (கல்லூரி கண்காணிப்பாளர்)

FIR.copy

மற்றும் எதிரி 3 திரு.உதயகுமார் (முன்னாள் கல்லூரி முதல்வர் ஓய்வு) ஆகியோர் மறைத்து, அவர் கல்லூரியில் பணிபுரிந்து வந்தது போல் பொய் அறிக்கையை University Grants commission-க்கு சமர்ப்பித்து அதன் பிரகாரம் University Grants commission-னிடமிருந்து உதவி பேராசிரியர் ஸ்ரீராம் என்பவருக்கு 24 மாதங்களுக்குரிய சம்பளமாக வழங்கப்பட்ட தொகை ரூ.11,68,896/ஐ நேர்மையற்ற முறையில் பெற்று திரு.கீ.துளசிய்யா வாண்டையார் (கல்லூரி செயலாளர் / தாளாளர்) என்பவரின் ஒப்புதலுடன் கையாடல் செய்தும், மேற்படி L.ஸ்ரீராம் நவம்பர் 2015 முதல் நவம்பர் 2017 மாதங்களுக்குரிய சம்பளம் பெற்றுக் கொண்டது போல் எதிரி-2, எதிரி – 3 மற்றும் எதிரி- 7 திரு.குமரேஷ் (கல்லூரி சுயநிதி பிரிவு கணக்காளர்) ஆகியோர் ஒன்றிணைந்து போலி ஆவணங்களை உருவாக்கி, அதை உண்மை போன்று காண்பித்து Utilization certificate-ஐ பெற்று University Grants commission-க்கு அனுப்பி வைத்து அரசை ஏமாற்றி, அதன் மூலம் அரசுக்கு ரூ.11,68,896/ நிதியிழப்பு ஏற்படுத்தியுள்ளார்கள். எனவே மேற்படி பல்கலைக்கழக மானியக்குழுவினரால் வழங்கப்பட்ட ரூ. 11,68,896 / தொகையை தவறாக பயன்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கிய எதிரி -6 திரு. துளசிய்யா மற்றும் எதிரி -2 திரு.துரைராஜன்,
எதிரி -3 திரு.உதயகுமார் மற்றும் எதிரி – 7 திரு.குமரேஷ் ஆகியோர் ஒன்றிணைந்து தற்காலிக உதவி பேராசிரியராக பணிபுரியாத ஒருவர் மேற்படி கல்லூரியில்

FIR.copy.

பணிபுரிந்ததாக போலி ஆவணங்கள் தயார் செய்து, அதனை உண்மையென்று பயன்படுத்தி University Grants commission-லிருந்து வழங்கப்பட்ட அரசு ஊதியம் ரூ.11,68,896 / ஐ நேர்மையற்ற முறையில் கையாடல் செய்து அரசு பணியாளராக இருந்து குற்றமுறு கெட்ட நடத்தையுடன் செயல்பட்டு எதிரிகள் 2,3,6 மற்றும் 7 இ.த.ச பிரிவு 120(B) 465, 468, 471, 477 (A), 409, 420 IPC r/w 13(1)(c) of prevention of corruption act 1988-ன் படி குற்றம் புரிந்துள்ளனர்.

எனவே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநராக முதற்கட்ட விசாரணை அறிக்கை PE 35/2019/EDN/TH- நாள் 08.02.2021-ன் படியும் மற்றும் Higher education (F 1) department secretariet, chennai -9 letter No. 7253/F1/2021-3 dt:19.04.2022-ன் படியும் எதிரிகள் 1முதல் 7 வரையிலானவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


எனவே இன்று 27.07.2022 ஆம் தேதி காலை 12.00 மணிக்கு தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.06/2023 u/s 120(B), 465, 468, 471, 477(A) 409, And 420 IPC r/w 109 IPC & 13(2) r/w 13(1) (c) of prevention of corruption act, 1988-ன் படி வழக்குப்பதிவு செய்து. இந்த முதல் தகவல் அறிக்கையின் அசல் மற்றும் எதிரிகள் -1 முதல் 5 வரையிலானவர்கள் பெயரில் வழக்குப்பதிவு செய்ய சம்பந்தப்பட்ட துறையின் முன் அனுமதி நகல், ஆகியவற்றை இணைத்து மாண்புமிகு முதன்மை குற்றவியல் நடுவன் மற்றும் தனி நீதிபதி, தஞ்சாவூர் இருப்பு கும்பகோணம் அவர்களுக்கு அனுப்பியும்,இதர நகல்கள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியும், ஒரு நகல் வழக்கு புலன் விசாரணைக்கு கோப்பில் வைக்கப்பட்டது.

இது போன்ற தகவல்கள் தஞ்சை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் சசிகலா அவர்களால் போடப்பட்டுள்ளது.

மேலும் இது பற்றி கேட்பதற்காக பூண்டி புஷ்பம் கல்லூரியின் முதல்வர் சிவக்குமாரிடம் பேசினோம் அவர் நீங்கள் எழுத்துப்பூர்வமாக கொடுங்கள் நாங்கள் பதில் தருகிறோம் நாங்கள் கல்லூரி செயலாளரை கேட்டு தான் முடிவு செய்ய முடியும் அதேபோல எனக்கு ஒன்றும் தெரியாது நான் புதிதாக வந்திருக்கிறேன் என்று தொடர்பை துண்டித்துக் கொண்டார் கல்லூரி முதல்வர் சிவக்குமார்.

இறந்து போனவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட முடியுமா என்று தெரிந்து கொள்ள ஊழல் தடுப்பு காவல் ஆய்வாளர் சசிகலாவிடம் கேட்டதற்கு வழக்கு பதிவு செய்திருக்கிறோம் அவர் இறந்துவிட்டார் என்பதால் அவர் பெயரை எடுத்துவிட்டு வழக்கு பதிவு செய்ய முடியாது. இறுதி அறிக்கை போடும்போது நாங்கள் அவர் இறந்ததை காண்பிப்போம் கல்லூரி நிர்வாகத்தை பொறுத்தவரை அனைத்து முடிவுகளும் அவர்கள் தான் எடுப்பார்கள் அதனால் அவர் பெயரில் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. தவிர மேல் நடவடிக்கை இதில் எதுவும் அவர் பெயரில் இருக்காது. அவர் இறந்துவிட்டார் என்பதை இறுதி குற்றப்பத்திரிக்கையில் காட்டி விடுவோம் என்றார் காவல் ஆய்வாளர் சசிகலா..

மேலும் கல்லூரியில் இருக்கும் சில பேராசிரியர்களிடம் கேட்டதற்கு “இந்த சம்பவம் நடக்கும் போதெல்லாம் எங்கள் கல்வி வள்ளல் சிறிது உடல் நலக்குறைவோடு சிரமப்பட்டு வந்தார் அப்போது இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் இன்னும் சிலர் சேர்ந்து இதுபோன்று நம்பிக்கை துரோகத்தை எங்கள் ஐயாவுக்கு எதிராக செய்திருக்கலாம் அது எங்கள் ஐயாவுடைய கவனத்திற்கு வராமல் இருந்திருக்கலாம் அதனால் ஏற்பட்ட நிலைதான் இப்போது. தற்போது இருக்கும் அவருடைய மகன் உட்பட யாரும் அப்போது கல்லூரி விஷயத்தில் தலையிடாமல் இருந்தனர் அதன் பால் இது போன்ற சம்பவம் நடந்திருக்கலாம். எப்போதும் இது போன்ற சம்பவங்களுக்கு கல்வி வள்ளல் அய்யா ஒத்துப் போக மாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று முடித்தனர் முக்கிய பேராசிரியர்கள். அவருடைய கவனம் இல்லாமல் செயல்பட்ட இந்த விஷயத்தை அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்து அவர் பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருந்தால் அதனை துடைக்க வேண்டியது ஒட்டுமொத்த கல்லூரியில் இருக்கும் அனைவரின் கடமையாகும்.

செய்தி…தமிழ்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here