புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் கட்டப்பட்டு நான்கு வருடங்களாகி திறக்கப்படாத நிலையில் இன்று பேருந்து நிலையத்தில் உள்ள 16 கடைகள் பேரூராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டன.!

0

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் கட்டப்பட்டு நான்கு வருடங்கள் ஆன நிலையில் திறக்கப்படாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விரைவில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை திறக்க கோரி கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இன்று பேருந்து நிலையத்தில் உள்ள 16 கடைகள் பேரூராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டன. ஏல தாரர்கள் டோக்கன் அடிப்படையில் உள்ளே அனுமதிக்க பட்டனர்.

ஏலம் ஆனது அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ-3000 வாடகைக்கு குறையாமல் உச்சபட்ச ஏலத்தொகையான ரூ-10,100 வரை ஏலம் விடப்பட்டன. ஏலமானது துவக்கத்தில் சலசலப்புடன் ஆரம்பித்து இறுதியில் சுமூகமாக நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி வட்டாட்சியர் இராமசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், மற்றும் பல அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் பேருந்து நிலையம் எப்பொழுது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அப்பகுதி பொதுமக்கள்.

செய்தி : பழனிவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here