புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் வரத்து வாரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீர் நிலைகளுக்கு வழிவகை செய்திட கோரி விசிகவினர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பேரூராட்சிக்கு உட்பட்ட ராட்டினக்குளம் கோழிகுடப்புகுளம் ஆகிய குளங்களுக்கு வரும் நீர் வரத்து வாரிகள் மற்றும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தோம் எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கப்படவில்லை இது சம்பந்தமாக விசிக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரத்து வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கில் வரத்து வாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் 22 12 2016 அன்று உத்தரவு பிறப்பித்தது ஆனால் இன்று வரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை இதனால் ராட்டினகுளம் பறையன்குளம் பங்களா குளம் கோழி குடப்புக்குளம் ஆகிய குளங்களுக்கு வர வேண்டிய தண்ணீர் மழைநீர் மழைக்காலங்களில் கூட வருவதில்லை என்றும் தென்னகர் பகுதியில் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்

இதனால் கடந்த காலங்களில் பலமுறை விசிக கட்சியின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் 5 முறை சமாதான கூட்டம் நடத்தியும் இன்று வரை வரத்து வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறிய பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் ரமேஷை கண்டித்து கறம்பக்குடி விசிகவினர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வரெத்தினம் தலைமையில் முருகன் கோவில் பின்புறம் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

