புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ஒருவழி பாதையை நடைமுறைக்கு கொண்டு வந்த வட்டாட்சியர் இராமசாமி…

0

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் செல்வதற்கு வழி இல்லாமல் அவதியுற்று வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் வட்டாட்சியர் இராமசாமி அவர்களிடம் போக்குவரத்து நெரிசலை சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சியினர், காவல் துறையினர்,வர்த்தக சங்கத்தினரை அழைத்து போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க ஆலோசனை நடத்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பேரூராட்சியினர் ஒலி பெருக்கியின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இன்று ஒரு வழி பாதையாக புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வாகனங்கள் அக்ரஹாரம், அம்புக்கோவில் முக்கம், செட்டிதெரு முக்கம், வழியாகவும் பட்டுக்கோட்டையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வாகனங்கள் சீனிகடை முக்கம் வழியாகவும் செல்வதற்கு வழி வகை செய்யப்பட்டு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பேரூராட்சியினர், காவல் துறையினர் உதவியுடன் இன்று நடைமுறைக்கு கொண்டு வந்தார் வட்டாட்சியர் இராமசாமி அவர்கள்.போக்குவரத்து நெரிசலை தனது அதிரடி நடவடிக்கையால் சரி செய்த வட்டாட்சியர் இராமசாமி அவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here