புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுவிடுதி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மெய் சொல்லி நாட்டைச் சேர்ந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ.பள்ளத்தி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் ஆனது புதுவிடுதி மற்றும் முத்தன் விடுதி கிராம பொதுமக்களுக்கு சொந்தமான கோயிலாகும் இந்த கோயிலில் உள்ள பள்ளத்தி அம்மனை புதுவிடுதி, முத்தன் விடுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளத்தி அம்மன் கோயில் கட்டடங்கள் சிமெண்ட் மேற்பூச்சுகள், தூண்கள் சிதிலமடைந்து இடிந்து விழுந்து வருகின்றது. பொதுமக்கள் அதை பொருட்படுத்தாமல் வழிபாடு செய்து வருகின்றனர்.

இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் உடனடியாக கோயில் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு சிதிலமடைந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ.பள்ளத்தி அம்மன் கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்.பழனிவேல்