புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூரில் தனியார் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைய உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் தரப்பினர் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று ஒன்பதாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் 100கும் மேற்பட்டோர் நேரில் சென்று தங்களது ஆதரவினை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனியார் உயிரி சுத்திகரிப்பு ஆலை ஆணையை ரத்து செய்யும் வரை பொதுமக்களுடன் தொடர்ந்து போராட போவதாக தெரிவித்தனர்.
செய்தியாளர்.பழனிவேல்

