பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் வரும் 5ல் அறிவிப்பார்!- அமைச்சர் அன்பில் மகேஷ்

0

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பிளஸ் 2 தேர்வு விவகாரத்தில் கல்வியாளர்கள், பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மருத்துவ நிபுணர் குழு, தோழமைக் கட்சியினர் உட்பட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு 2 நாட்களில் அறிக்கை அளிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மின்னஞ்சல் முகவரி அளித்து, அனைத்துத் தரப்பினரும் கருத்து கூறுமாறு கேட்டுள்ளோம். மேலும், மாவட்டந்தோறும் பெற்றோரிடம் கருத்துக் கேட்டு அறிக்கை அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்துத் தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில் இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருடன் நாளை மாலை 4 மணியளவிலும், அதன்பிறகு கல்வியாளர்கள், பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் ஆகியோருடன் மாலை 5 மணியளவிலும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறது. அதைத்தொடர்ந்து வரும் 5ம் தேதி காலை, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அவர் இறுதி முடிவை அறிவிப்பார்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here