பிறப்புறுப்பில் கம்பியை நுழைத்து சிதைப்பு; இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்கொடுமை!- மும்பையில் நடந்த பயங்கரம்

0

மும்பையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு இளம்பெண் நிர்பயா, கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவருடைய பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமாக சித்ரவதை செய்து சிதைத்தது கும்பல். அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, இந்த பெண்ணின் நினைவாக பெண்களுக்கான பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை ஒன்றிய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. தற்போது, 9 ஆண்டுகளுக்குப் பிறகு இதேபோன்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மும்பையின் புறநகர் பகுதியான சகிநாகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வேன் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு 34 வயதுடைய பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் இருப்பதாகவும், அவரை ஒருவர் தாக்குவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே, போலீசார் அங்கு சென்று பார்த்த போது அந்த பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, டாக்டர்கள் செய்த பரிசோதனையில் பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து சிதைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறி இருந்த நிலையில், அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மோகன் சவுகான் (45) என்ற நபரை, அடுத்த சில மணி நேரங்களில் போலீசார் கைது செய்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமையில் இவர் மட்டுமே ஈடுபட்டாரா? அல்லது வேறு நபர்களும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இளம்பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here