பிரபல இயக்குநரின் பெயரில் வந்த ஆபாச மெசேஜ்!- பதறிய பிரபல நடிகை

0

பிரபல இயக்குநரின் பெயரில் தனக்கு ஆபாச அழைப்பு வந்ததாக நடிகை ஒருவர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல வங்கமொழி நடிகை பாயல் சர்க்கார். பல்வேறு வங்கமொழி படங்களில் நடித்துள்ள இவர், வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் பாஜகவில் இணைந்த இவருக்கு பிரபல வங்கமொழி இயக்குநர் ரவி கினாகி பெயரில் பேஸ்புக்கில் பிரெஸ்ட் ரெக்யூஸ்ட் வந்துள்ளது.

அதை ஏற்றுக்கொண்ட நடிகைக்கு அடுத்த சில நிமிடங்களில் மெசஞ்சரில் ஒரு செய்தி வந்தது. அதில், தான் அடுத்து இயக்கும் படத்தில் தங்களை நாயகியாக தேர்வு செய்திருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். நன்றி என்று தெரிவித்த நடிகை தொடர்ந்து அவருடன் சாட் செய்துள்ளார்.

திடீரென்று அவருக்கு, இயக்குநரிடம் இருந்து ஆபாச மெசேஜ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சாட் விஷயத்தை அப்படியே தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்தார். சில நெட்டிசன்ஸ், இயக்குநரின் கணக்கை பாருங்கள், அது போலியாக இருக்கப் போகிறது என்று தெரிவித்திருந்தனர். அதன்படி நடிகை பார்த்தபோது, அது இயக்குநரின் பெயரில் உள்ள போலி கணக்கு என்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகை பாயல் சர்க்கார் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த கணக்கை முடக்கியுள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் ரவி கினாகி கூறும்போது, “என்னை தொடர்புகொள்ள நினைத்தால் போன், அல்லது அலுவலகத்தில் பார்க்கலாம். சமூக வலைதளங்கள் மூலம் யாரையும் நடிப்புக்காக அணுகுவதில்லை. என் பெயரில் போலி கணக்குகள் உள்ளன. இதுபோன்ற செயல்களால் எங்களைப் போன்றவர்களுக்கு கெட்டப்பெயர் ஏற்படுகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here