பரோட்டா கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததால் பறிபோன தாய், மகள் உயிர்!-கோவில்பட்டியில் நடந்த அதிர்ச்சி

0

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பரோட்டா கிரேவி சாப்பிட்ட பின்பு குளிர்பானம் குடித்த தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி தங்கப்பநகரை சேர்ந்த இளங்கோவன் என்பவரது மனைவி கற்பகம் மற்றும் அவரது மகள் தர்ஷினி ஆகியோர் கடலையூர் ரோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா கிரேவி பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டில் வந்து சாப்பிட்டுள்ளனர். நீண்ட நேரமாகியும் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாததால் வீட்டருகே உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி இருவரும் குடித்துள்ளனர்.

பின்னர் இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கற்பகத்தையும் தர்ஷினியையும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here