`நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!’- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

0

“நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பேரவையில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் துரைமுருகன், அதிமுக சார்பில் விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன்,காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விசிக சார்பில் சிந்தனைச் செல்வன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், பாமக சார்பில் ஜி.கே.மணி, மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏழை மாணவர்களால் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் விலக்குக்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைக்காமல் உள்ளார். ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்திய போதும் மசோதா ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை. மாநில உரிமையும் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றும் உரிமையும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதால் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here