நடிகை ராதாவுக்கும், சப்இன்ஸ்பெக்டர் கணவருக்கும் என்னதான் பிரச்னை!

0

சப்-இன்ஸ்பெக்டர் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா விருகம்பாக்கம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`சுந்தரா டிராவல்ஸ்’ படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ராதா. இவர் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வசந்தராஜா தற்போது எண்ணூர் காவல்துறை நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கணவர் வசந்தராஜா தன்னை அடித்து துன்புறுத்துவதாக நடிகை ராதா விருகம்பாக்கம் காவல்துறையில் இன்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here