நடிகை யாமி திடீர் காதல் திருமணம்!

0

காதலித்து பிரபல இயக்குநரை திடீரென திருமணம் செய்துகொண்டார் நடிகை யாமி கவுதம்.

தமிழில், `கவுரவம், ’தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை யாமி கவுதம். இந்தியில் காபில், சர்கார் 3, உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் ’உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ படத்தின் இயக்குநர் ஆதித்யா தர்ரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாயின.

உரி படத்தில் நடித்தபோது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது என்றும் கூறப்பட்டது. ஆனால், இதுபற்றி இருவரும் வெளியில் தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் இன்று திருமணம் செய்துகொண்டனர்.

இதுப்பற்றி ட்விட்டரில், எங்கள் குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தையும் வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here