நடிகர் செந்தில் குடும்பமே கொரோனாவால் பாதிப்பு!- தனியார் மருத்துவமனையில் அனுமதி

0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்தநிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து செந்திலின் மனைவி கலைச்செல்வி, மகன் மணிகண்டபிரபு, மருமகள் ஜனனி ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் மூன்று தினங்களில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடிகர் செந்தில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here