நடிகர் சூரி, மகன், மகள் ரூ.10.25 லட்சம் கொரோனா நிவாரண நிதி!

0

முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று நடிகர் சூரி ரூ.10 லட்சமும், அவரது மகன், மகள் சார்பில் ரூ.25 ஆயிரத்தையும் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

கொரோனா நிவாரண உதவிகளுக்கு நிதி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று நடிகர் நடிகைகள் பலர் நிதி உதவி அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார். இதற்கான காசோலையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.விடம் அவர் நேரில் வழங்கினார். சூரியின் மகள் வெண்ணிலா, மகன் சர்வான் சார்பிலும் ரூ.25 ஆயிரம் நிதி வழங்கினார். இதுபோல் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவரும் நடிகருமான கே.ராஜன் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அனுப்பி வைத்தார்.

சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப்பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் திரைக்கு வருகிறது. அண்ணாத்த படத்தில் முதல் தடவையாக ரஜினிகாந்துடன் சூரி இணைந்து நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here