Thursday, June 26, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதொழிற்சங்க பெயரில் வசூல் வேட்டை.. அக்கப்போரில் தஞ்சாவூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்

தொழிற்சங்க பெயரில் வசூல் வேட்டை.. அக்கப்போரில் தஞ்சாவூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்

தஞ்சை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கும் சர்ச்சைக்கும் வேறுபாடு கிடையாது எப்போது பார்த்தாலும் ஏதாவது அக்கப்போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் அதிகாரியை கண்டித்து ஊழியர்களும் ஊழியர்களை கண்டித்து அதிகாரிகளும் என சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். தற்போது ஒரு படி மேலே போய் தொழிற்சங்க தலைவர் ஒருவர் அதிகாரியை மிரட்டி அடிக்க போன சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது இச்சம்பவம் காட்டுத்தீ போல பரவ என்ன நடந்தது ஏன் அந்த அதிகாரியை அடிக்கச் சென்றார் தொழிற்சங்க தலைவர் என்று விசாரிக்க அங்கு சென்றோம் நம்மிடம் பேசினார்கள். அதே தொழிற்சங்கத்தில் இருக்கும் முக்கிய நபர்கள்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலத்தில் ஆளும் தொழிற்சங்கத்தை சேர்ந்த (LPF 325) நிர்வாகிகள் மண்டல நிர்வாகத்திற்கு எதிராகவும் தங்களது சுய இலாபத்திற்காகவும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை மிரட்டி,
உலகமே வியக்கும் வண்ணம் நல்லாட்சி செய்து வரும் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி வருகிறார்கள்.
LPF 325 தொழிற்சங்கத்தின் மண்டல செயலாளர் எழிலரசன் கண்காணிப்பாளர் என்பவர் தஞ்சாவூர் மண்டலத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பட்டியல் எழுத்தர்களுக்கு பணி வழங்கும் உதவியாளர் பிரபாகரன் என்பவரை வைத்து கொண்டு கொள்முதல் நிலையங்களுக்கு தகுந்தாற்போல் ரூபாய் 5000 முதல் ரூபாய் 10000 வரை வசூல் செய்கிறார். இதற்காகவே பிரபாகரனுக்கு LPF 325 சங்கத்தில் மண்டல துணை செயலாளர் வாங்கி கொடுத்தது மட்டுமன்றி சுமார் நான்கு வருடங்களாகியும் பிரபாகரனை வேறு இருக்கைக்கு பணியிட மாற்றம் செய்யாமல் பார்த்து கொள்கிறார்.
பிரபாகரன் மீது ஏற்கனவே ஏகப்பட்ட புகார்கள் இருந்தும் அவர் G Pay மூலம் பணம் பெற்றதை ஆதாரத்துடன் புகார் அளித்தும் அவர் மீது எவ்வித நடவடுக்கையும் எடுக்காதவாறு எழிலரசன் பார்த்துக் கொள்கிறார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நிர்வாக இயக்குநர் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பிரிவில் ஒரே இருக்கையில் பணிபுரிபவர்களை பணியிடம் மாற்றக் கோரி அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவ்வுத்தரவை பின்பற்றி தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் செல்வம் 30.05.2025 அன்று மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பிரிவில் ஒரே இருக்கையில் பணிபுரிந்த 30 பேரை பணியிடம் மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார் அந்த உத்தரவை பிரபாகரன் என்பவரும் சசிக்குமார் என்பவரும் வாங்கவில்லை. அந்த உத்தரவில் பிரபாகரன் பெயரும் இடம் பெற்றுள்ளதால் மீதமுள்ள 28 பேரையும் மிரட்டி பணியிடம் மாறக்கூடாது எனக் கூறி வருகிறார் DRO தகுதியில் உள்ள ஒரு அதிகாரி போட்ட உத்தரவை ஆளும்கட்சி தொழிற்சங்கம் என்ற பெயரில் வாங்க மறுத்ததுடன் மற்றவர்களை அந்த உத்தரவினை செயல்படுத்த விடாமலும் எழிலரசன் பார்த்துக் கொள்கிறார்.
எழிலரசன் தனது பதவியை அடாவடியாக பயன்படுத்துவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தஞ்சாவூர் மண்டல மேலாளர் (தரக்கட்டுப்பாடு) பாபநாசம் தாலுகா கருப்ப முதலியார் கோட்டை என்ற கொள்முதல் நிலையத்தை கடந்த 03.06.2025 அன்று ஆய்வு செய்த போது கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்கு ரூபாய் 8000 வரை ரெக்கவரி போட்டு அங்கு பணிபுரிந்த பட்டியல் எழுத்தரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார் அதனைக் கேள்வி பட்ட எழிலரசன் 10.06.2025 அன்று மதியம் மூன்று மணியளவில் மேலாளர் தரக்கட்டுப்பாட்டு அறைக்கே சென்று அவரை மரியாதை குறைவாக ஒருமையில் பேசி அடிக்க சென்றுள்ளார் மேலாளர் (தர கட்டுப்பாடு) தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதாலும் தான் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதாலும் அவரை மிரட்டி அடிக்க சென்றுள்ளார்.
மேலும் கொள்முதல் நிலையங்களில் உதவுபவர்களுக்கு பணியிடம் வழங்கும் கார்த்திகேயன் என்பவர் தனக்கு பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் கேட்கப்படும் கொள்முதல் நிலையத்தில் பணி வாங்குகிறார். பணம் தராதவர்களுக்கு 100 கிமீ தூரம் வரை சென்று வரும்படி கொள்முதல் நிலைய பணியை வழங்குகிறார். உதாரணமாக திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த பாலாஜி என்ற மாற்றுத்திறனாளி உதவுபவருக்கு ஒரத்தநாடு தாலுக்கா திருமங்கலக்கோட்டை கிழக்கு என்ற கொள்முதல் நிலயத்தில் பணி வழங்கியுள்ளார் அவரது வீட்டிலிருந்து கொள்முதல் நிலையம் சுமார் 90 கி.மீ. மாற்றுத்திறனாளியான பாலாஜி என்னால் அவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியாது எனவே வீட்டிற்கு அருகில் பணி வழங்குமாறு 26.05.2025 அன்று முது நிலை மண்டல மேலாளரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார் அப்போதே முதுநிலை மண்டல மேலாளர் கார்த்திகேயனை நேரில் அழைத்து பணியிடம் மாற்ற சொல்லி இருக்கிறார் ஆனால் கார்த்திகேயன் மாற்றவில்லை பிறகு 29.05.2025 அன்று பாலாஜி சார்ந்த தொழிற்சங்கம் மூலமாக கடிதம் கொடுத்துள்ளார். அதற்கும் மாற்றம் செய்யவில்லை 30.05.205 அன்று திரு.து.கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் முதுநிலை மண்டல மேலாளர் உதவியாளரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார் அதற்கும் பாலாஜிக்கு பணியிடம் மாற்றாமல் எனக்கும் ஆளும் கட்சியில் முக்கிய பிரமுகர்கள் இருக்கிறார்கள் அவர்கள் நினைத்தால் உன்னை அடியோடு சாய்த்து விடுவார்கள் என்னை எதுவும் செய்ய முடியாது என பாலாஜியிடம் தெரிவித்துள்ளார். எழிலரசன் பிரபாகரன் கார்த்திகேயன் ஆகியோரது இது போன்ற செயல்களால் தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுக கட்சியின் பெயர் அலுவலகத்தில் சீரழிந்து கிடக்கிறது. .
எனவே தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும்படி நடந்து கொள்ளும் LPF 325 சங்கத்தின் நிர்வாகிகள் எழிலரசன் பிரபாகரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வேறு மண்டலத்திற்கு பணியிட மாறுதல் செய்யக் கேட்டுக் கொள்கிறோம்..

LPF 325 தொழிற்சங்கத்தின் மண்டல செயலாளர் எழிலரசன் அவர்களிடம் பேசினோம்.
இது என் மீது வேண்டுமென்றே கருத்து வேறுபாடு இருப்பவர்கள் சொல்லக்கூடிய குற்றச்சாட்டு இதில் ஏதும் உண்மை இல்லை. நான் ஒரு சங்கத்தின் மாவட்ட செயலாளர் எனக்கு மேல் பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் கேட்டுதான் நான் முடிவு செய்ய வேண்டும் நான் எதையும் தனியாக முடிவு செய்ய முடியாது பிரபாகரை மாற்றுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது .
ஆனால் அவரை மாற்றுவதில் சிக்கல்கள் இருக்கிறது இது சங்கத்தில் இருக்கிற அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் எங்களுடைய சங்கத்தில் 1700 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அவர்களின் குறைகளை கேட்க நாங்கள் மற்ற அதிகாரிகளிடம் பேசி தான் ஆக வேண்டும் அதனைத் தவறாக இவர்கள் சித்தரித்து ஒருவர் இருவர் இருக்கும் லெட்டர் பேடு சங்கங்களை வைத்துக் கொண்டு இது போன்ற சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்கள். என்னை பொருத்தவரை எந்த நேரமாக இருந்தாலும் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன் என்று முடித்தார் எழிலரசன்.

இப்ப பிரச்சனைகள் பற்றி கேட்க முதுநிலை மண்டல மேலாளர் செல்வம் அவர்களை தொடர்பு கொண்டோம் நம் அழைப்பினை அவர் ஏற்கவே இல்லை அவருடைய விளக்கத்தை அளித்தாலும் வெளியிட தயாராக இருக்கிறோம்.

செய்தி – கார்த்திக்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments