திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் நிலையத்தில் தொட்டியத்தை அடுத்த காமலாபுரம்புதூர் ரத்தினம் மகன் கொவுதம் வயது (22) இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார் அதே கம்பெனியில் பணிபுரிந்து வரும் திருமால் நகர் பேரையூர் மதுரை சுந்தர மகாலிங்கம் மகள் ஐஸ்வர்யா வயது (21) இருவருக்கும் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்று பாதுகாப்பு கேட்டு தொட்டியம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் முத்தையன் தஞ்சம் கேட்டு அடைந்தனர் இதுகுறித்து தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் இருவரின் பெற்றோர்களை அழைத்து பேசி சமாதானம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
செய்தியாளர் : க.சுந்தரேசன்