தேசிய விருதை வென்றார் நடிகர் சூர்யா!- 5 விருதுகளை அள்ளியது சூரரைப் போற்று

0

தேசிய விருதை வென்றுள்ள நடிகர் சூர்யா, அவர் நடித்துள்ள சூரரைப் போற்று 5 விருதுகளை அள்ளியது.

68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு: சிறந்த துணை நடிகருக்கான விருது ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்திற்காக பிஜு மேனன் பெற்றார். சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்திற்காக பிஜு மேனன் பெற்றார். மறைந்த இயக்குநர் சச்சிதானந்தத்துக்கு தேசிய விருது அறிவிப்பு!( ஐயப்பனும் கோஷியும்) சிறந்த பின்னணி பாடகி விருது, அய்யப்பன் கோஷியும் படத்தில் இடம்பெற்ற ‘களக்காத்த சந்தனமேரம்’ பாடலுக்காக நாட்டுப்புற பாடகி நஞ்சம்மாவுக்கு கிடைத்து உள்ளது.

22 ஜூலை 2022 5:01 PM சிறந்த அறிமுக இயக்குநராக மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திரைப்படங்கள் தொடர்பான சிறந்த புத்தகமாக அனூப் ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த அறிமுக இயக்குநராக மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த வசனத்திற்காகவும் மண்டேலே தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

சிறந்த வர்ணனை விருது ஷோபா தரூர் சீனிவாசன். சிறந்த இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ். சிறந்த ஒளிப்பதிவாளர் ஷப்டிகுன்ன காளப்பா. ஓ தட்ஸ் பானு திரைப்படத்திற்காக ஆர்.வி.ரமணி-க்கு சிறந்த இயக்குநர் விருது. சிறந்த புலனாய்வுப் பிரிவு படமாக சேவியர் பிரிகேடியர் ப்ரீதம் சிங் தேர்வு, இயக்குநர் பரம்ஜீத் சிங். மலையாள மொழியில் வாங்கூ, மராத்தி மொழியில் அவன்சித் படங்களுக்கு சிறப்பு ஜுரி விருதுகள் அறிவிப்பு.

சிறந்த தெலுங்கு மொழிப்படமாக கலர் போட்டோ. சிறந்த சண்டைக்காட்சிகள் அமைப்பு படமாக மலையாளப் படமான அய்யப்பனும், கோஷியும் தேர்வு. சிறந்த இசையமைப்பாளர் அலா வைகுந்தபுரம் படத்திற்காக தமன் தேர்வு. 5 விருதுகளை சூரரைப் போற்று குவித்துள்ளது. சிறந்த படம் சூரரை போற்று சிறந்த திரைக்கதை – சூரரை போற்று சிறந்த பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று) சிறந்த நடிகர் – சூர்யா (சூரரை போற்று) சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரை போற்று) சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

சிறந்த திரைக்கதை – சூரரை போற்று சிறந்த இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று) சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படம் (Non-Feature):மலையாளம் டிரீமிங் ஆப் உட்ஸ் ( Dreaming of woods ) சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் (Non-Feature): பபுங் ஷியாம் (மணிப்புரி) சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.

கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படம் (Non-Feature):மலையாளம் டிரீமிங் ஆப் உட்ஸ் ( Dreaming of woods ) சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் (Non-Feature): பபுங் ஷியாம் (மணிப்புரி) திரைப்படங்களுக்கு உகந்த மாநிலமாக மத்தியப்பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 30 மொழிகளில் 305 திரைப்படங்கள் பதிவு செய்யப்பட்டன. சிறப்பு திரைப்படம் அல்லாத பிரிவில், 28 மொழிகளில் 148 படங்கள் பெறப்பட்டன. அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தவிர 15 மொழிகளில் உள்ள திரைப்படங்கள் உள்ளீடுகளாக பெறப்பட்டன. 24 புத்தகங்கள் மற்றும் 5 திரைப்பட விமர்சகர்கள் சினிமா விருதுகளில் சிறந்த எழுத்துக்காக போட்டியிட்டனர். தாதா சாகேப் பால்கே விருது திரைப்படப் பகுதி (28 வகைகள்) அம்சம் அல்லாத பிரிவு (22 வகைகள்) சிறந்த எழுத்துப் பிரிவு (1 வகை) உள்பட 5 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here