துறையூர் அருகே பேருந்தில் தவறவிட்ட 8 சவரன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரொக்கம் அடங்கிய கைப்பையை காவல்துறையினர் மீட்டனர் துறையூர் காவல் நிலையத்தில் அன்பன் ஜெயசுதா தம்பதியினர் அளித்த புகாரைத் தொடர்ந்து தாபேட்டை போலீசார் பேருந்தை சோதனை செய்து கைப்பையை மீட்டனர் துரிதமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் உதவி ஆய்வாளர் சஞ்சீவி மற்றும் அவர்களுடன் பணியில் இருந்த காவலர்கள் ஆகியோரை எஸ்.பி நாகரத்தினம் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்…
செய்தியாளர் ; ரூபன்ராஜ்