கடலூர் ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கடலூரைச் சேர்ந்த ரவுடி வீரா நேற்று தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். வீரா கொலை வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணன் என்பவர் பண்ருட்டியை அடுத்த குடிமியான்குப்பம் பகுதியில் பதுங்கியிருந்துள்ளார்.
-Advertisements-

அவரை கைது செய்ய சென்ற போது போலீசாரை தாக்கிவிட்டு கிருஷ்ணன் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது நடந்த என்கவுன்டரில் கிருஷ்ணன் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணன் தாக்கியதில் போலீஸ் எஸ்.ஐ. ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. என்கவுன்டரில் கொல்லப்பட்ட கிருஷ்ணன் உடல் முண்டியப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
-Advertisements-
