Thursday, October 9, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதிருவோணம் அருகே அண்ணன் 15 லட்சம் கடன் வாங்கி தலை மறைவானதால் வெளிநாட்டில் இருந்து வந்த...

திருவோணம் அருகே அண்ணன் 15 லட்சம் கடன் வாங்கி தலை மறைவானதால் வெளிநாட்டில் இருந்து வந்த தம்பி மீது ஓட ஓட வெட்டி படுகொலை நள்ளிரவில் பயங்கரம்

கொலை செய்த பாஜக நிர்வாகி போலீசில் சரண்டர்.
வாட்டாத்தி கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை போலீசார்

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகேஉள்ள வாட்டாத்தி கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு இவரது மகன் சக்திவேல், வயது 38, இவருக்கும் பேராவூரணி தாலுக்கா குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த பேராவூரணி பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ் குமார், வயது39, என்பவரிடம் 15 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் வாங்கிய சக்திவேல், தலைமறைவாகி உள்ளதாக தெரிகிறது இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த கிராமத்திற்கு வருகை தந்த சக்திவேலின் தம்பி பிரகதீஸ்வரன் வயது29, என்பவரிடம் ராஜேஷ் குமார்,

கைது செய்யப்பட்ட ராஜேஷ் குமார் படம்,

பிரகதீஸ்வரனின் அண்ணன் சக்திவேல் பணம் கொடுக்கல் வாங்கல் குறித்து 15 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டு சென்றதாகவும் அந்த பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டுமென அவரிடம் நேற்று இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜேஷ் குமார், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரகதீஸ்வரன் மீது வெட்டி உள்ளார் இதில் உயிர் பிழைக்க பிரகதீஸ்வரன் வீட்டிலிருந்து ஓடி உள்ளார் பிறகு ராஜேஷ்குமார், பிரகதீஸ்வரன் மீது ஓட ஓட சரா மாறியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு வாட்டாத்திகோட்டை காவல் நிலையத்தில் சரண்டர் ஆகியுள்ளார் இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் ராஜேஷ் குமார், மீது வழக்கு பதிவு செய்து பாப்பாநாடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் பிரகதீஸ்வரனின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட பிரகதீஸ்வரன் படம்,


பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பாஜக ஒன்றிய தலைவர் இளைஞரை ஓட ஓட அறிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பதட்டமாகி உள்ளது மேலும் கொலை செய்யப்பட்ட பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments