`திருடும் போதெல்லாம் மாட்டிகொள்கிறேன்!’- போலீஸிடம் கதறிய காமெடி திருடன்

0

சென்னை மதுரவாயலில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்த திருடனை அயர்லாந்தில் இருந்தபடி சி.சி.டி.வி. கேமராவில் பார்த்து வீட்டின் உரிமையாளர் போலீசில் சிக்கவைத்தார்.

சென்னை போரூர் அருகே தனியாக வசித்து வரும் 67 வயதான சண்முகசுந்தரி என்ற பெண், அண்ணாநகரில் உள்ள தனது மகளின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இவரது மகன் அருண் முருகன் அயர்லாந்து நாட்டில் உள்ள நிலையில், தனியாக வசித்து வரும் தனது தாயின் பாதுகாப்பிற்காக வீட்டில் சி.சி.டி.வி. கேமராவை வைத்திருந்தார்.

சம்பவத்தன்று தன் தாயின் வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக, சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை தனது செல்போன் மூலம் பார்த்த போது கொள்ளையன் ஒருவன் வீட்டிற்குள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சைக்கோ முரளி என்ற திருடனை கையும் களவுமாக பிடித்தனர். இவர் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, திருடி வந்தது தெரிய வந்தது. மேலும் தான் திருடும் போதெல்லாம் போலீசில் மாட்டிகொள்வதாகக் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து சைக்கோ முரளியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here