தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் திருச்சி மாவட்ட தலைநகரில் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு முழு நேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க கோரியும்,சத்துணவு ஊழியர்கள் ஒய்வு பெறுகிறபோது ஒட்டு மொத்த தொகையாக ரூ 5 லட்சமாக வழங்க கோரியும், 63 ஆயிரத்திரத்திற்கும்மேற்பட்ட காலிபணியிடங் களை போர்கால அடிப்படையில் நிரப்ப கோரியும், சத்துணவு ஊழியர்களின் ஓய்வு தொகை ரூ.9000 ஆயிராமாக வழங்க கோரியும், காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளி களிலும் சத்துணவு ஊழியர்களை கொண்டு அமுல் படுத்த கோரியும், சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வும், கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் கோரியும், சத்து உணவு ஊழியர்களுக்கு தேக்க நிலை ஊதியத்தை விரைவாக வழங்க கோரியும், கொரனா காலத்தில் பயன்படுத்த முடியாத உணவுப் பொருட்களுக்கும்.,காலவதியான பொருட்களை பதிவேட்டிலிருந்து ரத்து செய்தும்,விதித்திட்ட தண்ட தொகையை ரத்து செய்ய வேண்டி தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் சார்பில் 72 மணி நேர பட்டினி போராட்டத்தில் ஏறத்தாழ 400 ஊழியர் திருச்சி மாவட்டத்தில் மாவட்ட தலைவர் Tஅமுதா , மாவட்ட துணைத்தலைவர்கள் எம்.சாந்தி எஸ்.சேட் முகமது , மாவட்ட செயலாளர் அல்போன்ஸா, மாநில.துணை தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் தொடர் 72 மணி நேர பட்டினி போரட்டம் அனைத்து கோரிக்கைளையும் தமிழக அரசுக்கு வழியறுத்தி போராட்டம் தொடங்கியது