Tuesday, December 2, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedதிருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் டாஸ்மார்க் ஊழியர்கள் மனுவுடன் முற்றுகை:--

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் டாஸ்மார்க் ஊழியர்கள் மனுவுடன் முற்றுகை:–

டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலை திரும்பப் பெற முடியாது – திருச்சி டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகை

தமிழகத்தில் டாஸ்மாக் கடையில் விற்க்கபட்ட மதுபான காலி பாட்டில்களை நாளை முதல் திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசி செல்வதால் மிருகங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில்
ஏற்கனவே 15மாவட்டங்களில் காலி பாட்டில் திரும்ப பெரும் முறை தற்போது அமலில் உள்ளது.

இந்நிலையில் திருச்சி முழுவதும் நாளை முதல் டாஸ்மார்க் கடைகளில் காலி பாட்டிலை திரும்ப பெற வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளதை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் உள்ள 136டாஸ்மாக் கடையை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று காலை திருச்சி மாவட்டம் பழைய ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் டாஸ்மாக் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அது சமயம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் கூறுகயில்..

சுற்றுலாத்தலங்களில் வனவிலங்குகள் பாதிக்கப்படுவது என்பதற்காக திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தற்போது எந்தவித முன்னறிவிப்பு இன்றி படிப்படியாக இதனை செயல்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் Poc மற்றும் ஸ்கேனர்கள் பயன்படுத்துவதில்லை.
நாங்க இவற்றை பயன்படுத்தி வருகிறோம்.
மேலும் ஆள் பற்றாக்குறை உள்ளது என்பதை முதுநிலை மண்டல மேலாளரிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.

அப்பணியை தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர். எனவே தனியார் நிறுவனத்திலிருந்து ஆட்கள் பெற்றுக் கொள்ளும்படியான பணியை செய்ய வேண்டும்.

ஏற்கனவே எங்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையும், இடவசதி இல்லை.

தொடர்ந்து அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைக்கு தயாராக உள்ளோம் என தெரிவித்தார். மேலும் டாஸ்மார்க் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10. எனும் திட்டத்தினால் எங்களுக்கு என்ன பயன் என குடிமகன்கள் கேள்வி எழுப்பினர். நாங்கள் மது அருந்தும் பார்களில் தற்போது பிளாஸ்டிக் கிளாஸ்கள் தண்ணீர் பாட்டில்கள், திண்பண்டங்கள் அனைத்தும் , கடுமையான விலையில் சுகாதார மற்ற வகையில் உள்ளது. தற்போது கண்ணாடி பாட்டில் திரும்ப பெறப்படும் திட்டத்தினால் , பார் நடத்துபவர்கள் பார்களில் நாங்கள் வாங்கும் பொருட்களுக்கு மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றும், ஒரு காலி மது பாட்டில் கடையில் விற்றால் பாட்டிலுக்கு ரூ.2. கிடைக்கிறது. அந்த இரண்டு ரூபாய் பணத்தையாவது எங்களுக்கு எங்கள் பணத்தையே வாங்கி எங்களுக்கே திரும்ப தரும் காலி பாட்டில் திருப்ப தரும் திட்டத்தில் ரூ 2 சேர்த்து ரூ 12 ஆக தரவேண்டும் என குடிமகன்கள் தெரிவித்தனர். மேலும்FL2 மதுபானக் கூடங்களில் வழங்கும் மதுவகைகள் கண்ணாடி பாட்டில்கள் இல்லையா எனவும்? கள்ள சந்தையில் இரவு பகல் பாராது விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு இந்த திட்டம் எவ்வாறு செயல் படுத்தப்படும் என்றும் கேள்வி எழுப்பினர்? பதில் தருமா அரசும்,,நிர்வாகமும்?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments