திருச்சி மாநகராட்சியும்,
டி ஆர்எம்டி108 அமைப்பும் இணைந்து
திருச்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது
இந்த முகாமை மேயர் மு.அன்பழகன்,
மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகள், பரிசோதனைகளை பார்வையிட்டார்கள்.
இந்த மருத்துவ முகாமில் பல பிரிவுகளில் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பொது மருத்துவ பரிசோதனை,
கண் பரிசோதனை,
எலும்பு அடர்த்தி பரிசோதனை,
சர்க்கரை நோய் பரிசோதனை
பல் பரிசோதனை மற்றும்
இலவச ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் செய்தனர்.

இந்நிகழ்வில் நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாமன்ற உறுப்பினர் ஜெ.கலைச்செல்வி,
டாக்டர்கள் பிரவீன் கிருஷ்ணகுமார்,
வருண் பிரசன்னா ரோஷன்,அர்ச்சனா, மற்றும் டிஎம் ஆர்டி
108 அமைப்பின் அலுவலகத் தலைமைப் பொறுப்பாளர்கள்:
தலைவர் விமல் ராஜ் துணைத் தலைவர்
இனியன் அமுதன்,
செயலாளர்
பிரேம் குமார்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
