திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 140, திருச்சிராப்பள்ளி (மேற்கு) தொகுதி மற்றும் 141, திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (29.10.2023) காலை திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணனால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது.
இதில் 140 திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,31,480, பெண் வாக்காளர்கள் 1,42,114, மற்றும் இதரர் 35 பேர் உள்ளனர். மேலும் 141 திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,23,902, பெண் வாக்காளர்கள் 1,32,128, மற்றும் இதரர் 71 பேர் உள்ளனர். வாக்காளர்கள் தங்களது வாக்காளர் பதிவு தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியலினை பொதுமக்கள் ஐந்து மண்டலங்களில் சரிபார்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது மத்திய மாவட்ட ம திராவிட கழக மாவட்ட செயலாளர் க.வைரமணி ,மாநகராட்சி மேயர் மு. அன்பழகன்,
திமுக பகுதி செயலாளர்கள் மோகன் தாஸ், கமால் முஸ்தபா, இளங்கோ
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர்,உதவி ஆணையர் த . சசிகலா, மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்