திருச்சி குழுமாயி அம்மன் குட்டிக்குடி திருவிழாவை முன்னிட்டு புத்தூர் நால்ரோடு அருகே இளைய அன்பிலாரின் அன்புத் தம்பிகள் குழு சார்பில் 14ம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தை புத்தூர் மீன் மார்க்கெட் சங்கத் தலைவர் சரவணன் தொடங்கி வைத்தார்.

விழா கமிட்டி உறுப்பினர்கள் புத்தூர் கே.கணேஷ். எம்.பி.ஏ, மீன் மார்க்கெட் கே. ரமேஷ்.உள்ளிட்ட பலர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர் . அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாப்பிட்ட பின் அன்னதான ஏற்பாட்டாளர்களை வாழ்த்தி சென்றனர் .