ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து திருச்சியில் மாபொரும் கண்டன ஆர்பாட்டம்
5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத பாஜக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்களின் வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதயும், தமிழகத்திற்கு எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்காமல் புறக்கணிக்பட்டுள்ளதோடு ஒன்றிய அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கி அரசியல் செய்துள்ளதை கண்டித்து, தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் விதமாக செயல்படுவதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி, மாணவரணி, தொண்டரணி,மகளிர் அணி,வழக்கறிஞர் அணி உள்ளிட்ட நிர்வாகிகள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்பாட்டத்தில் மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன்,சட்டமன்ற உறுப்பினர் கதிரவன்,ஸ்டாலின் குமார்,பழனியாண்டி,
ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி,சேர்மன் துரைராஜ், மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்..