திமுக மாநில இளைஞர் அணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதிய உணவு மற்றும் நோட்டு புத்தகம் வழங்கபட்டது..!

0

திமுக மாநில இளைஞரணி செயலாளர் சின்னவர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர இளைஞரணி சார்பாக, இராசாமடம் இராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியும், அருகேயுள்ள அரசினர் உயர்நிலை பள்ளியில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுபுத்தகம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆதி.ராஜேஷ் மற்றும் அதிரை நகர செயலாளர் இராம.குணசேகரன், அதிரை நகர்மன்ற தலைவர் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் மற்றும் நகர துணைசெயலாளர் தில்லைநாதன், நகர இளைஞரணி அமைப்பாளர் மைதீன் இளைஞரணி துனை அமைப்பாளர் அகிலன் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி வீரமணி,தெய்வ.கார்த்தி, இராசாமடம் கிளை செயலாளர் இளங்கோ கலந்து கொண்டனர்.மேலும் அதிராம்பட்டினம் 18வது வார்டில் தீவிர உறுப்பினர் சேர்ப்பு 18வது வார்டு செயலாளர் ஜெயமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம் நகர்மன்ற அனைத்து உறுப்பினர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி : சரண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here