`தல’ என்கிற பட்டப் பெயர் வேண்டாம்; `அஜித்’துன்னு கூப்பிடுங்க!’- ரசிகர்களுக்கு அஜித்குமார் கட்டளை

0

“தன்னை இனி தல என்று அழைக்க வேண்டாம்” என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய், அஜித் உள்ளனர். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகரின் பெயருக்கு முன்பும் ஒரு அடைமொழி வைத்து கூப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய்க்கு இளைய தளபதி என்றும் அஜித்திற்கு ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார் என்றும் அடைமொழி உண்டு. இவற்றையெல்லாம் கடந்து ரசிகர்கள் அவருக்கு செல்லமாக வைத்த `தல’ என்ற அடைமொழி தான் இன்றளவும் மனதில் நிலைத்து நின்றது. நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலகை சேர்ந்த பலரும் செல்லமாக தல என்றே கூப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு வணக்கம். இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here