திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள மணல்மேடு கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் வயது 38 இவருக்கு பேபி என்ற மனைவியும் 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று அதிமுகவில் இணைந்தவர் , இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கும் முத்துப்பேட்டையை சார்ந்த மதன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் இவர் தம்பி வீரபாண்டியனை மதன் தரப்பினர் படுகொலை செய்துள்ளனர், அதன் தொடர்ச்சியாக 2015ஆம் ஆண்டு முத்துப்பேட்டை மதன் தரப்பை தற்போது படுகொலை செய்யப்பட்ட ராஜேஷ் தரப்பினர் படுகொலை செய்துள்ளனர், அதில் முதல் குற்றவாளியாக தற்போது ஒன்றிய கவுன்சிலராக இருந்து வந்த ராஜேஷ் சேர்க்கப்பட்டுள்ளார் .

இந்நிலையில் இன்று காலை ஆலங்காடு கயிறு தொழிற்சாலை ஒயின்ஷாப் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் இவர் வாகனத்தின் மீது மோதி இவரை கீழே தள்ளி அந்த இடத்தில் படுகொலை செய்துள்ளனர் படுகொலை செய்து மட்டுமல்லாமல் தலையை அறுத்து எடுத்து கைலியில் கட்டிக்கொண்டு முத்துப்பேட்டை நோக்கி திரும்பும்போது கைலியிலிருந்த தலை கீழே விழுந்துள்ளது விழுந்த தலையைப் பார்த்து பொதுமக்கள் கூட அந்த இடத்தை விட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பித்து சென்றுள்ளனர் தற்போது மத்திய மண்டல ஐ.ஜி. ஜெய்ராம் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர் ,

கொலை செய்யப்பட்ட படங்கள்..




