`திமுக அசத்தல் வெற்றி; அதிமுக படுதோல்வி!’- முதல்வராகிறார் ஸ்டாலின் #TNElections2021

0

தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கிறது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உள்ளார். அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 157 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக 124 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், விசிக 4 இடங்களிலும் சிபிஎம் 2 இடங்களிலும், சிபிஐ 2 இடங்களிலும், பிற கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணி 76 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 68 இடங்களிலும், பாமக 4 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், பிற கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் வெற்றி

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலி 23,643 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

தி.மலையில் எ.வ.வேலு வெற்றி

திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு 1,38,066 வாக்குகள் பெற்று 94,926 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தணிகைவேலு 43,140 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

தஞ்சாவூரில் திமுக வெற்றி

தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் நீலமேகம் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பியைவிட 39,000 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி

3,468 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி அடைந்துள்ளார்.

பரமக்குடியில் திமுக வெற்றி

பரமக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் 14,376 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கீழ்ப்பென்னாத்தூரில் பாமக தோல்வி

கீழ்ப்பென்னாத்தூரில் பாமக வேட்பாளர் செல்வகுமாரைவிட 26,800 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் பிச்சாண்டி வெற்றி பெற்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி

திருத்துறைப்பூண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை 30,058 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றார் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து.

ஜான் பாண்டியன் தோல்வி

எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமன், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியனைவிட 39,485 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திமுக முதல் வெற்றி அறிவிப்பு

விளாத்திக்குளம் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பன் 51,237 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட நடிகர் மயில்சாமிக்கு 39 வாக்குகள் இதுவரை கிடைத்துள்ளது.

பென்னாகரம் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி 18,246 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் இன்பசேகரன் 12,720 வாக்குகள் பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். வித்தியாசம் 5,526

விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா 11,050 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் விருகை வி.என்.ரவி 8,269 வாக்குகள் பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். வித்தியாசம் 2,781 வாக்குகள்

ஆலந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் 17,744 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 11,345 வாக்குகள் பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். வித்தியாசம் 6,399 வாக்குகள்

அவினாசி தொகுதியில் சபாநாயகர் தனபால் 14,939 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். திமுக வேட்பாளர் அதியமான் ராஜு 10,031 வாக்குகள் பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். வித்தியாசம் 4,908

பண்ருட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.ராஜேந்திரன் 8,034 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக கூட்டணி வேட்பாளர் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் 6,482 வாக்குகள் பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். வித்தியாசம் 1,552

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 26,764 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் 10,549 வாக்குகள் பெற்று பின்னடவை பெற்றுள்ளார். வித்தியாசம் 16,215

விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் 5156 வாக்குகளும், திமுக வேட்பாளர் பழனியப்பன் 2619 வாக்குகளும் பெற்றுள்ளனர். வித்தியாசம் 2537 வாக்குகள்.

தாராபுரம் தொகுதியில் போடியிட்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 15186 வாக்குகளும், திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 13624 வாக்குகளும் பெற்றுள்ளனர். வித்தியாசம் 1562 வாக்குகள்.

கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 12061 வாக்குகளும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 11,632 வாக்குகளும் பெற்றுள்ளனர். வித்தியாசம் 429 வாக்குகள்.

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.இளங்கோ 5780 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 5198 வாக்குகள் பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். வித்தியாசம் 582 வாக்குகள்.

நன்னிலம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜோதிராமன் 12143 வாக்குகளும், அமைச்சர் காமராஜ் 11244 வாக்குகளும் பெற்றுள்ளனர். வித்தியாசம் 899 வாக்குகள்.

கடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அய்யப்பன் 23,304 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத் 22657 வாக்குகளும் பெற்றுள்ளனர். வித்தியாசம் 647 வாக்குகள்

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி 40,990 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் 13,986 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். வித்தியாசம் 27004 வாக்குகள்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வேலுமணி 9876 வாக்குகளும், திமுக வேட்பாளர் 4833 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 16,136 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் 6471 வாக்குகளும் பெற்றுள்ளார். வித்தியாசம் 9665 வாக்குகள் வித்தியாசம்.

கடம்பூர் தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 8474 வாக்குகளும், டிடிவிதினகரன் 6162 வாக்குகளும் பெற்றுள்ளனர். வித்தியாசம் 2312 வாக்குகள்.

நாகை தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ஆளூர் ஷானவாஸ் 7829 வாக்குகளும், தங்க கதிரவன் 6597 வாக்குகளும் பெற்றுள்ளனர். வித்தியாசம் 1232 வாக்குகள்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் 17356 வாக்குகளும், பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு 7985 வாக்குகளும் பெற்றுள்ளனர். வித்தியாசம் 9371 வாக்குகள்.

திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் 21070 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 13796 வாக்குகளும் பெற்றுள்ளனர். வித்தியாசம் 7274 வாக்குகள்.

திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் 2818 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கே.குப்பன் 1961 வாக்குகளும் பெற்றுள்ளனர். வித்தியாசம் 857 வாக்குகள்

போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் 6538 வாக்குகளும், துணை முதல்வர் ஓபிஎஸ் 6414 வாக்குகளும் பெற்றுள்ளனர். வித்தியாசம் 124 வாக்குகள்

காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடி 5409 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 2423 வாக்குகளும் பெற்றுள்ளனர். வித்தியாசம் 2986 வாக்குகள்.

திருக்கோவிலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பொன்முடி 13,921 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கலிவரதன் 4364 வாக்குகளும் பெற்றுள்ளனர். வித்தியாசம் 9557 வாக்குகள்.

திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 6296 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் எம்.மணிராமன் 5655 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். வித்தியாசம் 641 வாக்குகள்.

சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் 3,142 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சேகர் பாபு 1702 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். வித்தியாசம் 1440 வாக்குகள்.

சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் 3,142 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சேகர் பாபு 1702 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். வித்தியாசம் 1440 வாக்குகள்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் எம்ஆர்கேபன்னீர்செல்வம் 12,387 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் 11,797 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. கட்சிகளின் முன்னணி நிலவரம் அடுத்தடுத்து வெளி வந்து கொண்டிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 75 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகளும், தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றும் முடிந்த பிறகு அதற்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக திரையில் அறிவிக்கப்பட்டவு வருகிறது. குறைந்தது 15 சுற்றுகளில் இருந்து அதிகபட்சமாக 30 சுற்றுகள் வரை செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணுவதற்கு 3,372 மேஜைகளும், தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 739 மேஜைகளும், வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் போன்றோர் மின்னணு முறையில் அளித்த வாக்குகளை எண்ணுவதற்காக 309 மேஜைகளும் என மொத்தம் 4,420 மேஜைகள் போடப்பட்டுள்ளன.

173 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள திமுக தற்போதைய நிலவரப்படி 108 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. 25 தொகுதிகளில் பேட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களிலும், 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 4 தொகுதிகளிலும், 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 தொகுதிகளிலும், 6 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4 தொகுதிகளிலும், 3 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 1 தொகுதியிலும், 3 தொகுதிகளில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 இடத்திலும் 2 தொகுதிகளில் போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

179 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 99 தொகுதிகளிலும், 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 3 தொகுதிகளிலும், 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 11 தொகுதிகளிலும், ஒரு தொகுதியில் போட்டியிட்ட புரட்சி பாரதம் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது.

ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார், மதுரவாயலில் பெஞ்சமின், ஆவடியில் மாஃபா பாண்டியராஜன், திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

திருச்சியி் 9 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்று வருகிறது.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன 6,761 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 6,335 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

செல்லூர் ராஜூ 7,273 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் சின்னம்மாள் 6,147 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here