தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் 2021- சிறப்பு அம்சங்கள் #TNBudget2021LiveUpdate

0

தமிழக சட்டப்பேரவையில் 2021ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்கள் வருமாறு:

 • 2023-24ல் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.24,483 கோடியாக குறையும் என மதிப்பீடு
 • தமிழக அரசுக்கான வரி வருவாய் பங்கு உரியம அளவு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
 • சிறப்பாக செயல்படும் மாநிலத்துக்கு உரிய பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக நிதிக்குழு இறுதி அறிக்கை உள்ளது.
 • 14வது நிதிக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதியை சரிசெய்யவில்லை.
 • உள்ளாட்சி மானியத் தொகை ரூ.5,344 கோடியில் இருந்து ரூ.3,979 கோடியாக நிதிக்குழு குறைத்துள்ளது.
 • 14வது நிதிக்குழு பரிந்துரைத்த மானியங்களை தாமதமின்றி வழங்க வேண்டும்.
 • 15வது நிதிக்குழு மானியத்தை கூடுதல் நிபந்தனைகளை விதிக்காமல் உடனே விடுவிக்க வேண்டும்.
 • பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி வருவாயில் இருந்து மாநிலத்துக்கு உரிய பங்கு கிடைப்பதில்லை.
 • வருமான வரி மீதான கூடுதல் கட்டணத்தின் வருவாய்க்கான பங்கும் மாநிலத்துக்கு கிடைப்பதில்லை.
 • 2021-22ல் நிதிப் பற்றாக்குறைக்கு நிதி வழங்கும் வகையில் ரூ.84,686.75 கோடி கடன் வாங்க முடிவு
 • பெட்ரோலிய பொருட்கள் மீதான விற்பனை வரி அடுத்த 2 ஆண்டுகளுக்கு உயரும் என எதிர்பார்ப்பு
 • மது வகைகள் மீதான விற்பனை வரி சீராக வளர்ச்சி அடையும் என எதிர்பார்ப்பு
 • நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.1,33,530 கோடி என மதிப்பீடு
 • வருவாய் செலவு ரூ.2,46,694 கோடியாக இருக்கும் என கணிப்பு
 • வருவாய் பற்றாக்குறை ரூ.65,994 கோடியாக இருக்கும் என மதிப்பீடு
 • தேசிய பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து தமிழகத்திற்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
 • பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்.
 • பவானி பாசன பகுதிகளில் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
 • ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு
 • மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அரசின் திட்டம் உலக வங்கியின் பரிசீலனையில் உள்ளது.
 • 2021-22ல் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரு.688.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • நீர்வள ஆதார திட்டங்களுக்கு 2021-22ல் ரூ.6,453.17 கோடி ஒதுக்கீடு
 • மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
 • திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
 • திருமண உதவித் திட்டத்தில் ரூ.4,371 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
 • பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் ரூ.70,000 ஆக உயர்வு
 • படிப்படியாக அமைய உள்ள 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்கிற்காக ரு.144 கோடி நிதி ஒதுக்கீடு
 • உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 28,58,092 பேர் பயனடைந்துள்ளனர்.
 • மேட்டுப்பாளையத்தில் தேயிலை தொழில் குழுமம், விருதுநகரில் ஜவுளித்தொழில் குழுமம் உருவாக்க அனுமதி
 • ஜெயலலிதா விரிவான விபத்து, ஆயுள் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
 • எல்ஐசி- யுனெட்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது அரசு.
 • புதிய திட்டத்திற்கான முழு நிதியையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்.
 • விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு அறிக்கை தயாரிப்பு
 • தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை
 • இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.229.37 கோடி ஒதுக்கீடு
 • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்காக ரூ.13,967.58 கோடி ஒதுக்கீடு
 • ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.2,634 கோடி ஒதுக்கீடு
 • ரூ.562 கோடியில் மேட்டூர் அணையில் இருந்து வெள்ள உபரி நீரை வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்ல திட்டம்.
 • மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கும் தளங்கள், உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1,374 கோடி ஒப்புதல்
 • கொரோனா காரணமாக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.3,717.36 கோடி வருவாய் இழப்பு
 • 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.2,470.93 கோடி ஒதுக்கீடு
 • 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுவதன் மூலம் 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
 • சென்னை மாநகரை தனித்தன்மை வாய்ந்ததாக மாற்றும் திட்டத்திற்கு ரூ.3,140 கோடி ஒதுக்கீடு
 • கிராமப்புற வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,548 கோடி ஒதுக்கீடு
 • ஊரக சாலை திட்டத்துக்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு
 • காவிரி, தெற்கு வெள்ளாறு நதிகள் இணைப்பிற்காக ரூ.6,941 கோடி கொள்கை அளவில் அரசு ஒப்புதல்
 • தமிழ் வளர்ச்சித்துறையில் 78 விருதுகளுடன் மேலும் 2 புதிய விருதுகளை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு.
 • அருட்பெருஞ்சோதி வள்ளலார், காரைக்கால் அம்மையார் பெயரில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
 • ஹார்வர்டு, ஹூஸ்டனை தொடர்ந்து டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைய நிதியுதவி.
 • ஆளுமைத் திறன் குறியீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்
 • அத்திக்கடவு- அவிநாசி திட்டம் வரும் டிசம்பரில் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பு
 • கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.13,352.85 கோடி செலவிடப்பட்டுள்ளது.
 • 2021-22ம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்பு மானியத் தொகை ரூ.3,979 கோடியாக குறைப்பு
 • சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1953.98 கோடி ஒதுக்கீடு
 • தமிழ்நாட்டில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பரளவு அதிகரித்துள்ளது.
 • அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு
 • நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு
 • முதல்வரும் விவசாயி என்பதால் உழவர் பெருமக்களின் துயரத்தை அறிந்து செயலாற்றுகிறார்.
 • பாரம்பரிய நெல் ரகங்களுக்கான நெல் ஜெயராமன் மையம் நீடாமங்கலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
 • 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3,016 கோடி நிதி ஒதுக்கீடு
 • அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி ஒதுக்கீடு
 • மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 • ஆவின் வரலாற்றிலேயே முதல் முறையாக 2020 ஜூலை 19ம் தேதி 40.63 லட்சம் லிட்டர் கொள்முதல்
 • 2016ல் 17,218 ஆக இருந்த சாலை விபத்து உயிரிழப்பு 2020ல் 8.060 ஆக குறைந்துள்ளது.
 • பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி வருவாயில் இருந்து மாநிலத்துக்கு உரிய பங்கு கிடைப்பதில்லை.
 • 2021-22ல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு
 • மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.1,953 கோடி ஒதுக்கீடு
 • தமிழகத்துக்கு வழங்கப்படும் தேசிய பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லை.
 • தீயணைப்புத்துறைக்கு ரூ.436.68 கோடி ஒதுக்கீடு
 • புதிய நீதிமன்ற கட்டடங்களை கட்ட ரூ.289.78 கோடி உள்பட நீதித்துறைக்கு ரூ1,437.82 கோடி ஒதுக்கீடு
 • காவல்துறைக்கு ரூ.9,567.93 கோடி நிதி ஒதுக்கீடு
 • கைத்தறி மற்றும் கதர் துறைக்கு ரூ.1224.26 கோடி ஒதுக்கீடு
 • போக்குவரத்துறைக்காக ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு
 • நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.6023.11 கோடி ஒதுக்கீடு
 • பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு
 • வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 55.67 லட்சம் குடும்பங்களில் குடும்பத் தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
 • குடும்பத் தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
 • தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு
 • மாநில மொத்த உந்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதம் வரை அனுமதிக்க 15வது நிதிக்குழு பரிந்துரை
 • நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதிப் பற்றாக்குறையை தவிர்க்க இயலாது.
 • பயிர்க்கடன் தள்ளுபடிக்காக இடைக்கால வரவு- செலவு திட்ட மதிப்பீட்டில ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
 • 16,43,347 விவசாயிகளின் ரூ.12,119.74 கோடியை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது தமிழக அரசு
 • விவசாயிகளின் பயிர்க்காப்பீடு திட்டத்துக்காக ரூ.1,738.81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியில் பாடம் அறிமுகப்படுத்தப்படும்.
 • நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதிப் பற்றாக்குறையை தவிர்க்க இயலாது.
 • பொருளாதாரத்தில் எந்தவொரு பாதகமான தாக்கமும் ஏற்படாமலிருக்க பற்றாக்குறையை குறைக்க வேண்டும்.
 • 2021-22ல் நிதிப்பற்றாக்குறை மாநில ஜிடிபியில் 3.94 சதவிகிதம், ரூ.84,202.39 கோடியாக கட்டுப்படுத்தப்பட்டது.
 • கொரோனா தடுப்பூசிக்கான செலவினத்தை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.
 • உயர்கல்வித்துறைக்கு ரூ.5,478 கோடி ஒதுக்கீடு
 • காப்பீடு திட்டத்திற்கான நிதியை தமிழக அரசே ஏற்கும்.
 • அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
 • 12 ஆயிரம் பேருந்துகளில் 2 ஆயிரம் பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும்.
 • முதல் கட்டத்தில் 2,200 பிஎஸ் 6 பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
 • மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 கோடியாக இருக்கும் என மதிப்பீடு
 • 2021-22ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417,.30 கோடியாக இருக்கும்.
 • ஒப்புதல் தரப்பட்ட அனைத்து பணிகளையும் நிறைவேற்ற 2021-22ம் ஆண்டில் தேவையான நிதி ஒதுக்கப்படும்.
 • மூலதனச் செலவினம் 14.41 சதவிகிதமாக உயர்ந்து ரூ.43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு
 • தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி நிதி ஒதுக்கீடு
 • மின்சாரத்துறைக்கு ரூ.7,217 கோடி நிதி ஒதுக்கீடு
 • கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு
 • இடைக்கால பட்ஜெட்டை புறக்கணித்து திமுக வெளிநடப்பு
 • தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு
 • கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
 • பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே, தங்களுக்கு பேச அனுமதி கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதம்
 • இந்த அமளிக்கு மத்தியில் ஓபிஎஸ் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
-Advertisements-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here