`தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது!’- மத்திய அரசை காரணம் காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி

0

மிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை. பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன . 42 சதவீதம் வீடு மற்றும் குடிசைக்கான மொத்த மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்படுகிறது, நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக்கொடுக்கும் திட்டம் அறிமுகம் ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு திட்டம் கொண்டு வர திட்டம் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

2 மாதங்களில் 601-700 யூனிட்கள் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.275 உயர்வு 2 மாதங்களில் 601-700 யூனிட்கள் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.275 உயர்வு மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ரயில்வே மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு 65 காசுகள் உயர்வு மாதம் 301-400 யூனிட் பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு 147.50 உயர்த்த பரிசீலனை 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here