Tuesday, December 2, 2025
No menu items!
HomeUncategorizedதனியார் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக கடைகள் அடைப்பு

தனியார் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக கடைகள் அடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பிசானத்தூர் கிராமத்தில் அமைய உள்ள தனியார் உயிரி மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் போராட்டக் குழுவினருடன் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் இருமுறையும் மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும் பேச்சு வார்த்தை நடத்தி அந்த பகுதிக்கு மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை வராது என்று வாய்மொழியாக உத்தரவாதம் கொடுத்த நிலையில் அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை வராது என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் கொடுக்க வேண்டும் அவ்வாறு கொடுத்தால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்து
இன்றுடன் 32 நாட்களாக அப்பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் அப்பகுதி மக்கள் போராட்ட குழுவினருடன் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிசானத்தூர் கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கந்தர்வக்கோட்டை பகுதியில் வர்த்தக நலச் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்தால் அப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. பால் மருந்தகம் உள்ளிட்டவற்றைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதால் கந்தர்வக்கோட்டை பகுதியை விரிச்சோடி காணப்படுகிறது.

மேலும் பிசானத்துர் மக்களுக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களும் இன்று ஒரு நாள் ஆட்டோக்கோல் ஓடாது என்று அறிவித்து போராட்டத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும் பிசானத்தூர் கிராமத்தில் இருந்து தான் கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படக்கூடிய நிலையில் அப்பகுதியில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை வந்தால் நிலத்தடி நீர்மட்டம் முழுமையாக பாதிக்கப்படும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது அதனால் தான் நாங்கள் தொடர்ச்சியாக இந்த ஆலைக்கு எதிராக போராட்டத்தை முன்வைக்கின்றோம் வாய்மொழியாக உத்தரவு கொடுத்தால் அதனை ஏற்க முடியாது அதனால்தான் நாங்கள் எழுத்துப்பூர்வமாக பிசானத்தூர் பகுதிக்கு உயிரி மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை வராது என்று உத்தரவாதத்தை கேட்கிறோம் எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகமும் உத்தரவாதம் கொடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனவும் கிராம மக்கள் திட்டவட்டமாக ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர். பழனிவேல்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version