இன்று மாலை ஐந்து மணிக்கு மாதா கோட்டை மேம்பாலம் அருகில் அறிவழகன் என்கிற நபர் தனது (TN 49 BJ 4408) சூப்பர் ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனத்தில்
மனைவி உஷா மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ரூபா, பவ்யஸ்ரீ, மற்றும் தேஜாஸ்ரீ சகிதம்,

வல்லத்திலிருந்து பனங்காடு சாயபுரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது அதே திசையில் வந்த இன்னோவா கார் (UP 14 ET 7247) இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில்
மோதியதில் எதிர் கட்டையில் மோதி சம்பவ இடத்திலேயே அறிவழகன்,

தனது மகள் பவ்யா ஸ்ரீ மற்றும் தேஜா ஸ்ரீ ஆகியோர் பலத்த காயங்களுடன் இறந்து விடவே மீதமுள்ள இருவர் 108 ல் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை மக்களை பெரும் அதிர்ச்சியில் உள்ள ஆக்கியுள்ளது.