கடந்த 24.10.2024-ம் தேதி செங்கிப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட புதுக்குடி அருகே தஞ்சாவூர் to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்னேஷ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தமது காரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த போது ஆடு எதிர்பாராத விதமாக குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருப்பதற்காக Break அடித்த போது காரானது நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற விக்னேஷ்வரன் மற்றும் அவரது 9 வயது பெண் குழந்தை ஆகியோர் மரணமடைந்தனர். இது தொடர்பாக செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக
திருச்சி to தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்கள் தங்களுடைய கால்நடைகளை உரிய கட்டுப்பாடு இன்றி அவிழ்த்து விட்டு அதன் காரணமாக விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அவ்வாறு சுற்றி திரிந்த கால்நடைகளின் உரிமையாளரை கண்டறிந்து 26.10.2024-ம் தேதி செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் 3 வழக்குகள் மற்றும் 27.10.24-ஆம் தேதி 01 வழக்கு கள்ளப்பெ ரம்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதனால் பொதுமக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் தங்களது கால்நடைகளை சாலைகளில் சுற்றி திரியாமல் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இது மழை காலம் என்பதால் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு மனித உயிருடன் விளையாடாமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.