Thursday, March 19, 2026
No menu items!
Google search engine
HomeUncategorizedஜேசிஐ இயக்கத்தின் பதவியேற்பு விழா

ஜேசிஐ இயக்கத்தின் பதவியேற்பு விழா

ஜேசிஐ ஓசூர் சிப்காட் கிளை இயக்கத்தின் 21-வது பதவியேற்பு விழா ஒசூர் ஏடிஎஸ் மஹாலில் நடைபெற்றது. இதில் 2026 ஆம் ஆண்டிற்கான தலைவராக ஜேசி ஸ்ரீலட்சுமி பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு ஜேசி அப்பாஸ் பாஷா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மண்டல தலைவர் விஜய் கணேஷ் அவர்களும், கௌரவ விருந்தினராக ஓசூர் கம்போர்ட் ஆட்டோ டிரிம்ஸ் மேலாளர் கார்த்திகேயன் அவர்களும், திறவுகோல் பேச்சாளராக 2025 ஆம் ஆண்டின் மண்டல தலைவர் விக்னேஷ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். மண்டல துணைத் தலைவர் தினேஷ் குமார் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் சிறந்த சேவைக்கான கமல் பத்ரா விருது வெங்கடேசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு கிளை இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற பல்வேறு பயிற்சிகள், வியாபார மேம்பாட்டுப் பட்டறை, ஆற்றிய மக்கள் சேவை குறித்த ஆண்டறிக்கையை தலைவர் அப்பாஸ் பாஷா சமர்ப்பித்தார். இதற்கு உறுதுணையாக இருந்த கிளை இயக்க உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட இயக்குனர் ராஜேந்திரன் செய்திருந்தார். நிறைவாக செயலாளர் கோகுல் நன்றி பாராட்டினார்.
இந்நிகழ்வில் ஏராளமான ஜேசி ஐ சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments