சொகுசு கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி… கையும் களவுமாக சிக்கிய ஷாருக்கான் மகன்… பாலிவுட் அதிர்ச்சி

0

சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் நடந்த பார்ட்டியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவின் உல்லாசக் கப்பலான எம்பிரஸ், மும்பையில் இருந்து கோவாவுக்கு நேற்று முன் தினம் புறப்பட்டது. அந்தக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் பார்ட்டி நடக்க இருப்பதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கப்பலில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர், ஏறினர். அப்போது, போதை பார்ட்டியில் கலந்துகொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர்களிடம் அவர்கள் விசாரனை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

சுமார் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு ஆர்யன் கான் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை இன்று வரை காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் அவர்கள் இன்று ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, பிரபல பாலிவுட் ஹீரோ சல்மான் கான், நேற்றிரவு திடீரென ஷாருக்கான் வீட்டுக்குச் சென்றார். ஆர்யன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் ஷாருக் வீட்டுக்கு சென்றது குறித்து மீடியாவினர் அவரிடம் கேள்வி கேட்க முயன்றனர். அவர் பாதுகாவலர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.

இதனிடையே, ஆர்யன் கான் போதைப் பொருள் ஏதும் வாங்கவில்லை என்று அவர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ஆர்யன் கானின் வழக்கறிஞர் சதிஷ் மனேஷிண்டே, “நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுடன் ஷாருக்கானின் மகனுக்கு எவ்வித தொடரும் இல்லை. அவர் ஒர் விருந்தினராகவே அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதப் பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. அவரிடம் இருமுறை பரிசோதனை செய்யப்பட்டது. எதுவும் கண்டறியப்படவில்லை. போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ஆர்யன் கான் நல்ல விதமாகவே நடத்தப்பட்டார்” என்று கூறினார். மகன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த ஷாருக்கான் தனது படப்பிடிப்பை பாதியில் முடித்துக்கொண்டு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, வாட்ஸ் அப் உரையாடல் சிலவற்றை அவர் டெலிட் செய்தது தொடர்பாகவே ஆர்யன் கானிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அந்த உரையாடல்கள் போதைப் பொருள் தொடர்பானதாக இருக்கக் கூடும் என்பதாகவும் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here